‘பரோல் கிடையாது’ ‘6 மணிநேரம்தான் அனுமதி’.. சிறையில் கொலை குற்றவாளிக்கு நடந்த திருமணம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொலை குற்றத்துக்காக ஆயுள் தண்டனை பெற்ற நபருக்கு சிறை வளாகத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.

பஞ்சாப் மாநிலம் நபா பகுதியை சேர்ந்தவர் மன்தீப் சிங். பஞ்சாயத்து தலைவரை கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். 35 வயதாகும் மன்தீப் சிங் சிறையில் 10 வருடங்களை கடந்துவிட்டார். இந்நிலையில் பவன் தீப் கவுர் என்ற பெண்ணை மன்தீப் சிங்கிற்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர்.

இதனால் திருமணத்துக்கு பரோல் கேட்டு மன்தீப் சிங் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், இதனைப் பயன்படுத்தி அவர் தப்பித்துவிட வாய்ப்பு உள்ளதாக கூறி பரோல் வழங்க நீதிமன்றம் மறுத்தது. இதனை அடுத்து கடந்த 2016-ம் ஆண்டு மன்தீப் சிங்கின் புகைப்படத்தை வைத்து பவன் தீப் கவுர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் பரோல் கேட்டு மன்தீப் சிங் மனு தாக்கல் செய்துள்ளார். இதனை விசாரித்த நீதிமன்றம் சிறை வளாகத்தில் திருமணம் செய்துகொள்ள 6 மணிநேரம் அனுமதி வழக்கியுள்ளது. மேலும் இதற்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்ய சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இதனை அடுத்து சிறை வளாகத்துக்குள் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு, நெருங்கிய சொந்தங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. 6 மணிநேரத்துக்குபின் மனைவியை பிரிய முடியாத சோகத்துடன் மீண்டும் மன்தீப் சிங் சிறைக்கு சென்றார்.

PUNJAB, CONVICT, JAIL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்