‘அலைமோதிய மக்கள் கூட்டம்’..போஸ்ட் ஆபிஸில் கணக்கு இருந்தா ரூ. 15 லட்சம் தரும் மத்திய அரசு? உண்மையா..?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தபால் கணக்கு தொடங்கினால் மத்திய அரசு 15 லட்சம் தரும் என பரவிய வதந்தியை நம்பி மக்கள் தபால் நிலையத்தில் குவிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் மற்றும் கேரளா எல்லையில் உள்ள மூணாறில் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில், தபால் கணக்கு உள்ளவர்களுக்கு மத்திய அரசு 15 லட்சம் தரவுள்ளதாக வதந்தி பரவி உள்ளது. இதனை நம்பி தபால் நிலையத்தில் கணக்கைத் தொடங்க மக்கள் ஆரம்பித்துள்ளனர்.

இந்த தகவல் வேகமாக பரவி மக்கள் கூட்டம் அதிகமாக தொடங்கியுள்ளது. இப்படி ஒரு அறிவிப்பு ஏதும் வரவில்லை என பலர் கூறியும் மக்கள் தபால் நிலையத்தில் இருந்து கலைந்து செல்லாமல் இருந்துள்ளனர். ஒருவேளை வதந்தி உண்மையாகிவிட்டால் 15 லட்சம் கிடைக்காமல் போய்விடும் என தபால் கணக்கை தொடங்க மக்கள் வரிசையில் காத்திருந்துள்ளனர்.

தபால் கணக்கைத் தொடங்க ஆதார் மட்டும் போதும் என்பதால் பலரும் புதிதாக கணக்கை தொடங்க ஆரம்பித்துள்ளனர். கடந்த 2 நாட்களில் மட்டும் 1050 புதிய கணக்குகள் தொடங்கப்படுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தபால் நிலைய அதிகாரிகளே ‘வதந்திகளை நம்பாதீர்கள்’ என அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

MUNNAR, PEOPLE, POSTOFFICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்