'பக்கா...! இந்த ஷாம்பெயின்-க்கு ஆஃபர் இருக்கு...' 'மேடம் மொபைல்ல வந்த OTP நம்பர் சொல்லுங்க...' வந்தது ஒரே ஒரு மெசேஜ் தான்...' - நெஞ்சே வெடிச்சு போய் ஷாக் ஆன பெண்மணி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பையை சேர்ந்த 38 வயதான பெண்மணி ஒருவர் ஷாம்பெயின் பாட்டிலுக்கு 700 ரூபாய் சலுகை என்பதற்கு ஆசைப்பட்டு ரூ .62,000 ஏமாந்துள்ள சம்பவம் நடந்தேறியுள்ளது.
தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மும்பையை சேர்ந்த 38 வயதான பெண்மணி ஒருவர் தன் குடும்பத்தாரோடு நேரத்தை செலவிடும் வகையில் இரவு பார்ட்டிக்கு ஒரு ஷாம்பெயின் பாட்டிலை ஆர்டர் செய்ய நினைத்துள்ளார். மேலும் ஷாம்பெயின் பாட்டில் விற்பனை குறித்து இணையத்தில் தேடும் போது அவரின் வீட்டுக்கு அருகில் இருக்கும் மதுபான கடையில் 1700 ரூபாய் ஷாம்பெயின் பாட்டில் சலுகையாக 700 ரூபாய் தள்ளுபடி செய்து 1000 ரூபாய்க்கு தரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதையடுத்து இணையத்தில் இருந்த நம்பருக்கு தொடர்பு கொண்டபோது மறுபுறம் பிரகாஷ் சர்மா என்பவர் பேசியுள்ளார். மேலும் ஷாம்பெயின் பாட்டிலுக்கு ரூ.1,000 செலுத்துமாறு பிரகாஷ் கேட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்மணி தான் இ-வாலட் வழியாக பணத்தை செலுத்துவதாக கூறியபோது தன்னிடம் இ-வாலட் கணக்கு இல்லை எனக்கூறிய பிரகாஷ், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு விவரங்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டார்.
இதையடுத்து எந்த வித தயக்கமும், சந்தேகமும் அடையாமல் அந்த பெண்ணும் பிரகாஷிடம் அனைத்து விவரங்களையும், குறுஞ்செய்தியாக வந்த ஓடிபி நம்பரையும் கூறியுள்ளார். அதையடுத்து அவரின் கணக்கிலிருந்து 1000 ரூபாய் எடுக்கப்பட்டு, 15 நிமிடங்களுக்குள் ஷாம்பெயின் பாட்டில் வீட்டிற்கு வந்து சேரும் எனக்கூறி போனை துண்டித்துள்ளார் பிரகாஷ்.
அதையடுத்து சில நிமிடங்களில் அந்தப் பெண்ணின் தொலைபேசிக்கு, மற்றொரு OTP நம்பர் வந்ததுள்ளது. அதையடுத்து மீண்டும் போன் செய்த பிரகாஷ் இப்போது வந்த ஓடிபியை வைத்து தான் ஆர்டரை முடிக்க முடியும் எனக்கூறி தனக்கு அனுப்புமாறும் கேட்டுள்ளார்.
அதன்பின் சில நொடிகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.
61,000 டெபிட் செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெண்மணி பிரகாஷ் செல்போன் நம்பருக்கு அழைத்தபோது போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
இந்நிலையில் உடனடியாக மதுக்கடைக்குச் சென்ற பாதிக்கப்பட்ட பெண் அங்கிருந்த கடையின் மேலாளரிடம் நடந்த சம்பவங்கள் குறித்து புகார் அளித்தபோது, அந்த எண் மது கடைக்கு சொந்தமில்லை என்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பிரகாஷ் என்பவர் அழைத்த எண்ணின் வாட்ஸாப்பில், மேலாளரின் புகைப்படங்களை பதிவேற்றியுள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து 62,000 ரூபாய் இழந்த அந்த பெண்மணி காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 700 ரூபாய் சலுகைக்கு ஆசைப்பட்டு ரூ.62,000 இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்