VIDEO : ரோடு ஃபுல்லா தண்ணி... திறந்து கிடந்த 'பாதாள' சாக்கடை... யாருக்கும் ஒண்ணும் ஆகக்கூடாதுன்னு... "7 மணி நேரமா அங்கேயே"... 'லைக்'குகளை குவித்த பெண்ணின் 'மனிதாபிமானம்'!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வரும் நிலையில் சாலைகள் அனைத்திலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

இந்நிலையில், தெற்கு மும்பை பகுதியில் கனமழை காரணமாக சாலை ஒன்றின் பாதாள சாக்கடை ஒன்று திறந்துள்ளது. அதே வேளையில், சாலை முழுவதும் நீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருப்பதால் அது திறந்திருப்பது உடனடியாக தெரிய வாய்ப்பு இல்லை.

இதனால் அப்பகுதியில் வரும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து நேர்ந்து விடக் கூடாது என்பதற்காக அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கொட்டும் மழையை கூட பொருட்படுத்தாமல், அந்த பாதாள சாக்கடை அருகே நின்று கொண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். சுமார் 7 மணி நேரம் அந்த பெண்மணி அங்கு நின்று வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலானது.

50 வயதான  கந்த மூர்த்தி என அறியப்பட்ட பெண், இந்த சம்பவம் குறித்து கூறுகையில், 'மக்கள் யாருக்கும் விபத்து நேர்ந்து விடக்கூடாது என்பதற்காக தான் அங்கு சுமார் 7 மணி நேரம் நின்றேன். இந்த மாதிரியான தருணங்களில் நம்மாலான உதவியை செய்யவே நான் நினைத்தேன். அதன் பிறகு அங்கு வந்த ஊழியர்கள் நான் ஆபத்தான ஒரு காரியத்தில் ஈடுபட்டதற்காக என்னிடம் கோபம் கொண்டனர்' என தெரிவித்துள்ளார்.

கந்த மூர்த்திக்கு மொத்தம் 8 பிள்ளைகள். அதில் ஐந்து பேருக்கு திருமணமான நிலையில், மீதமுள்ள மூன்று பேரின் படிப்பு செலவிற்காக அவர் பூக்கடை நடத்தி வருகிறார். தனது உயிரை கூட ஒரு பொருட்டாக மதிக்காமல் மற்றவர்களுக்கு ஆபத்து நேரக்கூடாது என்பதற்காக மனிதாபிமான செயலில் ஈடுபட்ட பெண்ணிற்கு தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்