"நீங்க Like பண்ணா மட்டும் போதும்.. பணம் கொட்டும்".. புதுசா உருட்டிய கும்பல்.. எச்சரிக்கும் போலீஸ்.. அதிர்ச்சி பின்னணி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் மோசடி கும்பலிடம் 10 லட்ச ரூபாயை இழந்திருக்கிறார். இது குறித்து போலீசார் பொதுமக்களை எச்சரித்தும் வருகின்றனர்.

Advertising
>
Advertising

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | "சுயநலம் இல்லாத மனுஷன்".. புஜாராவுக்காக ரோஹித் செஞ்ச தியாகம்.. பாராட்டிய பிரபல பாலிவுட் நடிகர்!!..

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மனித குலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சியை அளித்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இணையத்தின் வீச்சும், சமூக வலை தளங்களின் வருகையும் பல கொடைகளை மானுட குலத்திற்கு அளித்திருக்கிறது. இதன் மூலம், நம்முடைய தகவலை நொடிப்பொழுதில் உலகெங்கும் கொண்டுபோய் சேர்க்க முடிகிறது. ஆனாலும், இதனை பயன்படுத்தி தீய காரியங்களிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். பிறரது தகவல்களை திருடுவது, அக்கவுண்ட்டை ஹேக் செய்து பணம் பறிப்பது என புதுப்புது வழிகளில் மக்களை ஏமாற்றி வருகின்றனர் இந்த மோசடி கும்பல்கள்.

அந்த வகையில் மும்பையில் புதுவகையான மோசடி ஒன்று நடைபெற்றுள்ளது. மும்பையை சேர்ந்த 49 வயதான பெண் ஒருவர் அண்மையில் சோசியல் மீடியாவில் ஒரு விளம்பரத்தை பார்த்திருக்கிறார். வீட்டில் இருந்தே வேலை வாய்ப்பு என அதில் குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது. அதை நம்பிய அந்தப் பெண்ணும் அதில் ஈடுபாடு காட்டியுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

அப்போது, அந்த பெண்ணுக்கு ஒரு மெசேஜ் வந்திருக்கிறது. அதில், தாங்கள் அனுப்பும் வீடியோக்களை லைக் செய்தால் பணம் அனுப்புவோம் என அந்த கும்பல் தெரிவித்திருக்கிறது. இதனையடுத்து அவர்கள் அனுப்பிய லிங்கில் சென்று வீடியோவை லைக் செய்திருக்கிறார் அந்த பெண். அப்போது 150 ரூபாய் பெண்ணுடைய அக்கவுண்டில் கிரெடிட் ஆகியுள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த அந்த பெண் தொடர்ந்து தனக்கு அனுப்பப்பட்ட வீடியோக்களை லைக் செய்திருக்கிறார். ஆனால், அதற்கு எவ்வித பணமும் கிடைக்கவில்லை.

மேலும், தாங்கள் சொல்லும் பிட்காயின்-ல் முதலீடு செய்யும்படியும் அதன்பிறகு சில டாஸ்க்குகளை முடிக்கவேண்டும் என மெசேஜ் வந்திருக்கிறது. அந்த பெண்ணும் அப்படியே செய்திருக்கிறார். இதனிடையே விர்ச்சுவல் அக்கவுண்ட் மூலமாக, அவருக்கு ரூ.20 லட்சம் கிடைத்திருப்பதாக உருட்டி இருக்கின்றனர் இந்த மர்ம கும்பல். ஆனால், அந்த தொகையை எடுக்க வேண்டுமானால் 8 லட்ச ரூபாயை முதலீடு செய்ய வேண்டும் என கும்பல் தெரிவித்திருக்கிறது.

Images are subject to © copyright to their respective owners.

இதற்கு சம்மதித்த பெண்ணும் பணத்தை முதலீடு செய்திருக்கிறார். 10.15 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்த பிறகும் பணம் வராததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெண் காவல்துறையில் இதுகுறித்து புகார் அளித்திருக்கிறார். இதுகுறித்து மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி கும்பலை வலைவீசி தேடிவருகின்றனர்.

இந்நிலையில் முன்பின் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் இதுபோன்ற விளம்பரங்களை நம்பவேண்டாம் எனவும், அவர்கள் அனுப்பும் லிங்கை கிளிக் செய்யவேண்டாம் எனவும் போலீசார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.

Also Read | துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த பூகம்பம்.. கலங்கிப்போன மக்கள்.. எல்லாம் முடிஞ்சதுன்னு நெனச்சப்போ வெளியான அடுத்த தகவல்..!

MUMBAI, WOMAN, SCAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்