ஒரு வருஷமா பியூட்டி 'பார்லர்'ல வேல பாத்துட்டு இருக்குற 'பொண்ணு'.. 'கடைசி' 4,5 மாசமா தான் இப்டி பண்ணியிருக்கா..." - திடுக்கிட வைத்த 'பின்னணி'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பை பகுதியில் கடந்த சில நாட்களாக போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் கும்பலை போலீசார் பிடித்து விசாரித்து வரும் நிலையில், இதுவரை பத்துக்கும் மேற்பட்ட குற்றவாளிகளை பிடித்துள்ளனர்.
இந்நிலையில், சுமார் 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 109 கிராம் கொக்கேன் என்ற போதை பொருளை வைத்திருந்த 24 வயது பெண் ஒருவரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். மஞ்சுஷா சிங் என்ற அந்த பெண், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மும்பைக்கு வந்துள்ளார்.
சிவாஜி நகரில் தேவந்தி என்னும் பகுதியில் அழகு நிலையம் ஒன்றில் மஞ்சுஷா சிங் பணிபுரிந்து வந்த நிலையில், அவருக்கு பணத் தட்டுப்பாடு அதிகம் வந்துள்ளது. அத்தகைய சூழலில் தான் போதைப்பொருள் கடத்தும் நபர் ஒருவரின் தொடர்பு கிடைத்துள்ளது. அதனை பயன்படுத்தி, மஞ்சுஷாவும் இந்த தொழிலில் இறங்கியுள்ளார்.
மஞ்சுஷாவிடம் போதை பொருள் இருப்பது தொடர்பாக, காவல் ஆய்வாளருக்கு தகவல் கிடைத்த நிலையில் அந்த பெண்ணை கைது செய்து அவரிடம் இருந்த போதை பொருளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஒருமுறை குறிப்பிட்ட நபரிடம் போதை பொருளை சேர்த்து விட்டால், அதற்காக தனக்கு 10,000 ரூபாய் கிடைக்கும் என்றும், இந்த தொழிலில் கடந்த நான்கைந்து மாதங்களாக தான் ஈடுபட்டு வருவதாகவும் மஞ்சுஷா தெரிவித்துள்ளார்.
மஞ்சுஷாவைத் தொடர்ந்து, அவருடன் தொடர்புடைய போதை பொருள் கும்பலை போலீசார் தற்போது தேடி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எங்கள நெனச்சு எங்க குடும்பம் கவலைப்படுறாங்க' ... 'ஆனா எங்களால வீட்டுக்கு போக முடியல' ... மும்பை போலீசாரின் விழிப்புணர்வு வீடியோ!
- 'இது தப்பான உறவுன்னு சொன்னேன்'...'கேக்கல'...'பிளான் போட்டு தூக்கிய தாய்'...பதற வைக்கும் சம்பவம்!
- 'கல்யாணம் பண்ணலாம்'...'ஆனா உன்மேல சந்தேகமாக இருக்கு'... இளைஞர் செய்த கொடூரம்!
- 'எவ்வளவு கெட்ட கெட்ட வார்த்த'... 'நடுரோட்டுல முகம் சுளிக்க வச்ச 'டெலிவரி கேர்ள்'...வைரலாகும் வீடியோ!
- 'நான் வேண்டாம்னு சொன்னேன்'...'சாப்பிட போன சிறுவனை கடத்திய பெண்'... பதற வைக்கும் சம்பவம்!
- 'ரோட்டுல செய்யுற காரியமா இது'... 'அதிர வைத்த இளைஞர்கள்' ... வைரலாகும் வீடியோ!
- DISTURBING VIDEO: 'நிக்குற இடம் மறந்து போச்சா'...'செல்ஃபி' எடுக்க முயற்சித்தவரின்...'பரிதாப நிலை'!