“இதுதான் என் அப்பா, அம்மா சொல்லிக் கொடுத்த இந்தியா”.. Uber டிரைவருக்காக பெண் செய்த செயல்.. நெகிழ்ச்சி சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

Uber கார் டிரைவர் நமாஸ் செய்வதற்காக பெண் பயணி செய்த சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

மும்பையைச் சேர்ந்த ப்ரியா சிங் என்பவர், தனது வீட்டிலிருந்து விமான நிலையம் செய்ய Uber கார் புக் செய்துள்ளார். பயணம் ஆரம்பித்த 10 நிமிடங்களிலேயே டிரைவரின் போனில் தொழுகை அழைப்பு ஒலியான அசான் ஒலித்துள்ளது. உடனே பிரியா சிங், டிரைவரிடம் ‘நீங்கள் நோன்பு இருக்கிறீர்களா?’ எனக் கேட்டுள்ளார். அந்த டிரைவரும், ‘ஆமாம் இன்று நோன்பு வைத்துள்ளேன். ஆனால் இது வாடகை கார், உங்கள் சவாரியை ஏற்கவேண்டிய சூழலாகிவிட்டது’ எனக் கூறியுள்ளார்.

உடனே பிரியா சிங் சற்றும் தயங்காமல், ‘நீங்கள் காரின் பின்புற சீட்டில் சென்று தொழுகை செய்யுங்கள். அதுவரை நான் முன் சீட்டில் அமர்ந்திருக்கிறேன்’ எனக் கூறி காரை நிறுத்தச் சொல்லியுள்ளார். இதனை அடுத்து காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு அந்த டிரைவர் நமாஸ் செய்துள்ளார். இதுகுறித்து பிரியா சிங் தனது லிங்க்ட் இன் பக்கத்தில் பதிவிட அது வைரலாகியுள்ளது.

அந்த பதிவில், ‘அவருடைய தொழுகையை முடித்துவிட்டு எங்கள் பயணம் தொடங்கியவுடன், நாங்கள் நல்லிணக்கம் பற்றி நிறைய பேசினோம். அப்போது, இந்த சம்பவம் குறித்து பல்வேறு சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்ய விரும்புவதாகக் கூறினேன். அந்தப் பதிவு மனிதநேயத்தை ஊக்குவிக்கும் என்று அவரிடம் கூறினேன். அவரும் சரி என்றார். இதோ உங்களுக்காகப் பகிர்ந்துள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘இதுதான் என் பெற்றோர் எனக்கு சொல்லிக் கொடுத்த இந்தியா’ என ப்ரியா சிங் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது பாராட்டை பெற்று வருகிறது.

MUMBAI, WOMAN, UBER DRIVER, NAMAAZ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்