'அய்யய்யோ வரிசையில நிக்குறது யாருன்னு தெரியுதா'?... 'பதறிய அதிகாரிகள்'... 'ஆர்டிஓ' அலுவலகத்தில் நடந்த ருசிகரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஓட்டுனர் உரிமம் விண்ணப்பிக்க போக்குவரத்து துறை மந்திரி யாரிடமும் சொல்லாமல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு திடீர் விசிட் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தானேயில் உள்ள வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்துக்கு போக்குவரத்து துறை மந்திரி அனில் பரப் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அவர் பொதுமக்கள் போல ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க வரிசையில் நின்று உள்ளார்.
அதிர்ஷ்டவமாக மந்திரி ஓட்டுனர் உரிம விண்ணப்பம் கொடுக்க இருந்த ஏஜெண்டும் அவரிடம் லஞ்சம் எதுவும் கேட்கவில்லை.
எனினும், மந்திரி அலுவலகத்துக்கு சென்ற போது அங்கு பல அதிகாரிகள் இல்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், மந்திரி ஓட்டுனர் உரிமத்துக்கு வரிசையில் நின்றதை அதிகாரிகள் சிலர் கவனித்தனர். முதலில் அதிர்ச்சி அடைந்த அவர்கள், பின்னர் பதற்றத்துடன் மந்திரியை அலுவலகத்துக்குள் அழைத்து சென்றனர்.
இந்த திடீர் ஆய்வு குறித்து மந்திரி அனில் பரப் கூறியதாவது:-
நான் யாரிடமும் எதுவும் கூறவில்லை. வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் ஏராளமான ஏஜெண்டுகள் இருந்தனர். எனவே முதலில் ஆர்.டி.ஒ. அலுவலகம் எப்படி செயல்படுகிறது என்பதை பார்க்க விரும்பினேன்.
விண்ணப்பத்தை நிரப்பி வரிசையில் நின்றேன். என்னிடம் யாரும் லஞ்சம் கேட்கவில்லை. ஆனால் பல அதிகாரிகள் அலுவலகத்தில் இல்லை. அதுகுறித்து நடவடிக்கை எடுத்து அறிக்கை அனுப்புமாறு போக்குவரத்து ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இனிமேல் 2 வாரங்களுக்கு ஒருமுறை மாநிலத்தில் உள்ள வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ள உள்ளேன். அப்போது விதிமுறை மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் அதிகாரிகள் பலர் இல்லாதது குறித்து ஊழியர் ஒருவர் கூறுகையில், "தென்மும்பையில் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவே அதிகாரிகள் சென்று இருந்தனர். மந்திரி வந்தது தெரிந்ததும் அவர்கள் பாதி வழியிலேயே திரும்பி அலுவலகத்துக்கு வந்துவிட்டனர்" என்றார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'என்ன தப்பு செஞ்சீங்க'?.. "'இது'க்காக எல்லாம் அவர் மேல போக்சோ பாயாது"!.. நீதிபதி பரபரப்பு தீர்ப்பு!.. சமூக வலைதளங்களில்... அனல் பறக்கும் விவாதம்!
- ‘ஒருவரின் ஆடை மீது தொட்டு பாலியல் தொல்லை அளிப்பது’.. ‘போக்சோ சட்டத்தின் கீழ் வராது!’ - மும்பை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
- 'தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்...' 'எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்...' - எக்மோ மூலம் சிகிச்சை...!
- "'ட்ரெயின்' பக்கத்துல வந்துருச்சு... சீக்கிரமா வாங்க..." எச்சரித்த 'போலீஸ்'... நெருங்கி வந்த 'ரெயில்'... 'திக்' 'திக்' நிமிடங்கள்... பரபரப்பு 'வீடியோ'!!!
- 'காரில் போடும் பம்பரால் வரும் பெரிய ஆபத்து'... 'பம்பர்களை அகற்றாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம்'... தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை!
- ‘கிளப்பில் நடந்த கைது சம்பவம்’... ‘வருத்தம் தெரிவித்து ரெய்னா அளித்த விளக்கம்’...!!!
- 'இந்தியாவின் இந்த நகரத்தில் 'காண்டம்' பயன்பாடு இருமடங்காக அதிகரிப்பு'... 'ஆனா பெண்களின் கருத்தடை மாத்திரை'?... பின்னணி காரணம்!
- ‘கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா திடீர் கைது’... ‘மும்பை கிளப் ஒன்றில் நடந்த சோதனைக்குப் பிறகு’... ‘போலீசார் அதிரடி நடவடிக்கை’...!!!
- 'அதிகரிக்கும் கொரோனா'... 'இன்று முதல் 15 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு'... அதிரடியாக அறிவித்த மாநிலம்!
- "இதுக்காக இன்னும் எத்தன நாள் ஒப்பாரி வெப்பாரு?".. 'க்ரைம் பிராஞ்சுக்கு மாறிய வழக்கு!'.. கங்கணா ஆவேச ட்வீட்!