லாக்டவுனுக்கு அப்புறம் ரொம்ப 'ஓவரா' போறாங்க சார்...! 'பார்க்க சகிக்கல...' 'எவ்வளவோ சொல்லி பார்த்தாச்சு...' 'ரோட்டில் எழுதப்பட்ட வாசகம்...' - கதறும் இளசுகள்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மும்பையில் இருக்கும் போரிவலி பகுதியில் உள்ள சத்யம் சிவம் சுந்தரம் என்ற கட்டடத்துக்கு வெளியே, "இங்கு முத்தமிட தடைசெய்யப்பட்ட பகுதி" என சாலையில் எழுதப்பட்டுள்ளது.

இந்த குடியிருப்பு பகுதியில், மாலை நேரத்தில் ஜோடிகள் வந்து ஜாலியாக சிரித்து பேசிக் கொண்டிருப்பதும், வெளிச்சம் குறைந்த உடனே அவர்கள் முத்தமிட்டுக் கொள்வதும் வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. இது குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு முகம் சுளிக்க வைக்கும் விதமாக உள்ளது. எனவே, அந்த மக்கள் "இங்கு முத்தமிட தடைசெய்யப்பட்ட பகுதி" என சாலையில் எழுதி வைத்துள்ளனர்.

இது குறித்து குடியிருப்பு வாசிகள் பேசுகையில், 'கொரோனா ஊரடங்கிற்கு பிறகு இங்கு ஜோடிகள் வந்து முத்தமிடுவது அதிகரித்துள்ளது. சாலையில் முத்தமிடும் பகுதி இல்லை என எழுதிய பின் ஜோடிகளின் வருகை சற்று குறைந்துள்ளது. இங்கு வருபவர்களும் செல்பி மட்டும் எடுத்து விட்டு செல்கின்றனர் என தெரிவித்தனர்.

இது குறித்து குடியிருப்பு சங்கத் தலைவர் கூறுகையில், 'உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி முத்தமிடுவது குற்றம் கிடையாது. நாங்கள் ஜோடிகளுக்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால், எங்களது வீட்டின் அருகே இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தான் கண்டிக்கிறோம். காரணம், எங்கள் குடியிருப்பில் நிறைய குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் உள்ளனர்.

நாங்கள் போலீசாரை அழைத்து கண்டிக்க சொன்னோம், ஆனால் அவர்கள் கண்டுக்கொள்ளவில்லை. எங்கள் பகுதி கவுன்சிலரிடம் குற்றச்சாட்டை வைத்தோம். அதனால் எந்த பயனும் இல்லை. எனவே தான், காதலர்கள் முத்தமிட அனுமதில்லை என சாலையில் எழுதினோம்.' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்