‘மக்கள் கூட்டமாக திரள்வது பேராபத்தை ஏற்படுத்தும்’.. மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட மாநில அரசு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பையில் மதுக்கடைகளை திறப்பதற்கான உத்தரவை மாநில அரசு திரும்பப் பெற்றுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று மும்பையில் 653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று மட்டும் கொரோனா வைரஸ் தாக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மும்பையில் 9758 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் மதுப்பானக்கடைகளை திறக்கலாம் என மத்திய அரசு தெரிவித்தது. இதனை அடுத்து கர்நாடகா, உத்தரப்பிரதேசம், ஆந்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அதேபோல் மும்பையிலும் மதுக்கடைகள் திறப்பதாக அரசு அறிவித்ததும், மக்கள் கூட்டம் கூட்டமாக கூட தொடங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன்மூலம் சமூக இடைவெளிகள் சிறுதும் கடைபிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டு, கொரோனா பரவல் வேகமாக பரவும் ஆபத்து இருப்பதால் மும்பை மாநகராட்சி அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடை தவிர மதுக்கடை உள்ளிட்ட மற்ற கடைகள் திறக்க தடை விதித்தது. இதனால் இன்று முதல் (06.05.2020) மதுக்கடைகளை மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மும்பையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை நெருங்கியுள்ள நிலையில் மதுக்கடைகளை திறப்பதால் சமூக இடைவெளியின்றி மக்கள் திரள்வது பேராபத்தை உண்டாக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வீட்டுக்கு' அனுப்பப்படும் 'கொரோனா நோயாளிகள்...!' ' தமிழக அரசு நடவடிக்கை...' ''காரணம் என்ன தெரியுமா?...''
- '5 ஆயிரம் மில்லி லிட்டர் வரை ஆர்டர், 120 ரூபாய் டெலிவரி சார்ஜ்'... 'சரக்கு வீட்டிற்கே டெலிவரி'... அதிரடி முடிவு!
- 'கையில காசு இல்ல, சாப்பிட வழி இல்ல'...'ஊருக்கு நடந்தே போறோம் சார்'...'மூட்டை முடிச்சுகளுடன் வந்த வடமாநில தொழிலாளர்கள்'... சென்னையில் பரபரப்பு!
- 'முகக்கவச தட்டுப்பாட்டுக்கு தீர்வு...' 'முப்பரிமாண' முறையில் உருவாக்கப்பட்ட 'என் 95 மாஸ்க்...' 'கிருமி நீக்கம் செய்து மீண்டும் பயன்படுத்தலாம்...'
- பாதிக்கப்பட்ட '70 பேரில் 69 பேர்' குணமடைந்தனர்... 'கடந்த 21 நாட்களாக எந்த தொற்றும் இல்லை...' 'பச்சை மண்டலத்துக்கு' மாறிய 'தமிழக மாவட்டம்...!'
- சீனாவுக்கு எதிரா ஒரு 'ஆதாரமும்' குடுக்கல... அமெரிக்காவை 'குற்றஞ்சாட்டும்' உலக சுகாதார அமைப்பு!
- '61500 கோடி' தாரோம் ஒன்று சேர்ந்த 'உலக' நாடுகள்... 'சீனாவுடன்' சேர்ந்து அமெரிக்காவும் மிஸ்ஸிங்!
- சாப்ட்டு 2 நாள் ஆச்சு 'கையில' காசு இல்ல... 1600 கி.மீ 'நடந்து' போக போறோம்... போலீஸ்க்கு 'ஷாக்' கொடுத்த இளைஞர்கள்!
- 'சீனாவுக்கு முன்னாடியே’... ‘அந்த நாட்டில் கொரோனா வைரஸ் பரவலா?’... 'மருத்துவர் வெளியிட்ட பகீர் தகவல்'!
- நாட்டிலேயே 'முதலாவதாக'... ஊரடங்கை மேலும் 'நீட்டித்த' தென்னிந்திய மாநிலம்... என்ன காரணம்?