"வீட்டுக்கு வந்து சாப்பிட்டு தான் போகணும்".. குடும்பத்துடன் சேர்த்து வச்ச போலீசுக்கு பெண் வச்ச கோரிக்கை.. நெகிழ்ச்சி வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மகாராஷ்டிரா மாநிலத்தில் குடும்பத்தை விட்டு பிரிந்து தவித்து வந்த பெண்ணை மீண்டும் குடும்பத்தினருடன் சேர்த்து வைத்திருக்கிறது காவல்துறை. இந்நிலையில் இந்த நெகிழ்ச்சி வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | முதல் நாளே ஜடேஜாவுக்கு டெஸ்ட் வச்ச கோச் டிராவிட்.. மனுஷன் அசால்ட் பண்ணிட்டாப்ல..!

மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரில் உள்ள பாந்திரா பேருந்து நிலையத்தில் 65 வயதான பெண்மணி ஒருவர் ஆதரவற்ற நிலையில் இருந்திருக்கிறார். இது குறித்து தகவல் அறிந்த வைல் பார்லே போலீசார் இது குறித்து விசாரணையில் இறங்கினர். அப்போது அந்த பெண்மணி உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் பாந்திராவில் சிக்கிக் கொண்டதாகவும் மீண்டும் வீட்டிற்கு செல்ல தனக்கு வழி தெரியவில்லை எனவும் கூறியிருக்கிறார்.

இதைக் கேட்டு சோகமடைந்த அதிகாரிகள் உடனடியாக அந்த பெண்மணியின் குடும்பத்தினரை கண்டுபிடிக்க களத்தில் இறங்கினர். அதன்படி உத்திர பிரதேச மாநில போலீசின் உதவியுடன் அந்த பெண்மணியின் உறவினர்களை காவல்துறையினர் கண்டுபிடித்து இருக்கின்றனர். இதனை அடுத்து இளைஞர் ஒருவர் அந்த பெண்மணியை அழைத்துச் செல்ல மும்பைக்கு விரைந்து வந்திருக்கிறார். தனது உறவினரை கண்ட அந்தப் பெண்மணி கண்களில் நீர் வழிய பெருமகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

அப்போது தன்னை தனது குடும்பத்தினருடன் சேர்த்து வைத்ததற்காக காவல்துறை அதிகாரிகளின் கைகளை இறுகப் பற்றியவாறு அந்த பெண்மணி உருக்கத்துடன் நன்றி தெரிவித்திருக்கிறார். மேலும் தனது வீட்டிற்கு வந்து சாப்பிட்டு செல்லுமாறும் அன்பு கட்டளை வித்திருக்கிறார் அந்தப் பெண்மணி. இந்த வீடியோவை மும்பை போலீஸ் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

அந்தப் பதிவில் "மக்களின் மனதிலும் இல்லத்திலும் எங்களுக்கான வழியாய் உருவாக்கும் விதம் இதுதான். குடும்பத்தை விட்டு வெளியேறி தவித்த 65 வயது பெண்மணியை பத்திரமாக உறவினர்களுடன் வைல் பார்லே போலீசார் சேர்த்து வைத்திருக்கிறார்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இதுவரையில் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்திருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் பலரும் காவல்துறையினரின் இந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Also Read | ஒரே அசதி... திருடப்போன இடத்துல தூக்கம் போட்ட ஆசாமி.. எழுப்பி கூட்டிட்டுப்போன போலீஸ்.. யாரு சாமி இவரு..!

MUMBAI, MUMBAI POLICE, REUNITE, WOMAN, FAMILY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்