'எங்கள நெனச்சு எங்க குடும்பம் கவலைப்படுறாங்க' ... 'ஆனா எங்களால வீட்டுக்கு போக முடியல' ... மும்பை போலீசாரின் விழிப்புணர்வு வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலிலுள்ள நிலையில் மும்பை போலீசார் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டு வருகின்றனர். அத்திவாசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் வரவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளனர். இருந்த போதும் சில பொது மக்கள் எந்தவித விழிப்புணர்வும் இல்லாமல் பொதுவெளிகளில் சுற்றி வருகின்றனர்.

இந்நிலையில், மும்பை போலீசார் அனைவரும் ஒன்றிணைந்து மக்கள் விழிப்புணர்வாக இருக்க வலியுறுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், 'எங்களுக்கும் குடும்பங்கள் உள்ளது. ஆனால் எங்களால் அவர்களுடன் நேரத்தைக் கழிக்க முடிவதில்லை. நீங்கள் பத்திரமாக வீட்டில் இருந்தால் நீங்களும் உங்கள் குடும்பமும் நல்லபடியாக இருப்பீர்கள். அதனால் வீட்டிற்குள் இருந்து எங்களுக்கு ஆதரவளியுங்கள். கொரோனா வைரஸ் தடுக்க எங்களுடன் இணைந்து போராடுங்கள்' என தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் இதுவரை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

MUMBAI POLICE, CORONA AWARENESS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்