'சுஷாந்த் வழக்கில் அதிரடி திருப்பம்'... 'சுஷாந்த் வீட்டிலிருந்து சிக்கிய 5 டைரிகள்'... மும்பை போலீஸ் தீவிர விசாரணை!
முகப்பு > செய்திகள் > இந்தியாசுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அதிரடி திருப்பமாக, அவருடைய வீட்டிலிருந்து 5 டைரிகளை போலீசார் கைப்பற்றியுள்ளார்கள்.
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த சுஷாந்த் சிங் ராஜ்புட்கடந்த 14ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது திடீர் மறைவு நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 34 வயதே ஆன இளம் நடிகர் ஏன் இந்த முடிவைத் தேடிக் கொண்டார் எனப் பலரது மனதிலும் கேள்வி எழுந்துள்ள நிலையில், அவரது குடும்பத்தினர் சிபிஐ விசாரணை கோரியுள்ளார்கள்.
தற்கொலைக்கு எதிரான படத்தில் நடித்த ஒருவரே அந்த முடிவைத் தேடிக் கொண்டது நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று, அவரது மரணத்திற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும் எனப் பலரும் கூறி வருகிறார்கள். அவர் கடந்த சில மாதங்களாகவே பாலிவுட்டிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டதாகவும், அதுவே அவருக்குப் பெரிய மன உளைச்சலைக் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே சுஷாந்த் வழக்கில் அதிரடி திருப்பமாக அவரது வீட்டிலிருந்து 5 டைரிகளை போலீசார் கைப்பற்றியுள்ளார்கள். சுஷாந்த்தின் தற்கொலைக்கு முன்பு கடிதம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்பது பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், தற்போது டைரி கைப்பற்றப்பட்டுள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதில் அவர் சந்தித்த பிரச்சனைகள் மற்றும் தற்கொலை என்னும் கொடூர முடிவை எடுக்க எதனால் தள்ளப்பட்டார் என்பது குறித்த தகவல்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 2.25 லட்சம் மதிப்புள்ள 'சிறப்பு' ஊசிகள்... கடைசிவரை முயன்றும் 'காப்பாற்ற' முடியவில்லை... கமிஷனர் உருக்கம்!
- 'எங்க அடிச்சா வலிக்கும்னு கொரோனாவுக்கு நல்லா தெரிஞ்சிருக்கு!'.. அடுத்தடுத்து அரங்கேறும் துயரம்!.. சவாலை சந்திக்க தயாராகும் காவல்துறை!
- VIDEO: குடிபோதையில் லாரி டயரை ‘கட்டிப்பிடித்து’ ரகளை.. பரபரப்பை ஏற்படுத்திய இளைஞர்..!
- "ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!".. 'போன்' பண்ணிய 15 வயது 'சிறுவன்'!.. 'அதிர்ந்த' போலீஸார்!
- நாங்கள் 'ஒன்றாக' வாழ்ந்தோம்... 9 மணி நேர 'தீவிர' விசாரணையில்... போலீசாரிடம் 'உண்மைகளை' ஒப்புக்கொண்ட நடிகை!
- VIDEO: கார்ல கொரோனாவுக்கு பலியானவங்க ‘சடலம்’ இருக்கு சார்.. ‘சவப்பெட்டியை’ திறந்து பார்த்து மிரண்டுபோன போலீஸ்..!
- "ரஜினிகாந்த்தின் போயஸ் கார்டன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!".. 108 கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன் கால்!.. பிறகு தெரியவந்த உண்மை!
- 'துணை நடிகைகளை வைத்து போட்ட பிளான்'... 'ஸ்பாக்குள் அடைத்து வைக்கப்பட்ட இளம்பெண்கள்'... கூண்டோடு சிக்கிய கும்பல்!
- ‘அப்பா என்ன மன்னிச்சிருங்க’!.. ‘எல்லோரும் என்ன அப்படி சொல்லி கிண்டல் பண்றாங்க’.. விபரீத முடிவெடுத்த 16 வயது சிறுவன்..!
- 'டிக்டாக் அன்பர்களே'... 'பெத்த மகளை வச்சுக்கிட்டு இப்படிப் பேசலாமா'?... 'கோட்டை வரை பறந்த புகார்'... ஜி.பி.முத்துவுக்கு நேர்ந்த கதி!