"வாய்க்குள்ள இருந்த பல்லை மறந்துட்டீங்களே பாஸ்".. 15 வருஷ தலைமறைவு.. குற்றவாளியை காட்டிக் கொடுத்த தங்கப்பல்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

15 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளி ஒருவரை தற்போது தங்கப்பல் மூலம் போலீசார் கண்டுபிடித்துள்ள செய்தி அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

                        Images are subject to © copyright to their respective owners.

Also Read | பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலர் தினத்தில் திருநம்பியை கரம்பிடித்த இளம்பெண்!!

கடந்த 2007 ஆம் ஆண்டு மும்பை பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் பிரவீன் அஷுபா ஜடேஜா என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார்.

சேல்ஸ்மேன் ஆக இருந்து வந்த பிரவீனிடம், அவரது முதலாளி மற்றொரு வியாபாரியிடம் இருந்து சுமார் 40 ஆயிரம் ரூபாய் வாங்கி வருமாறு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை வாங்குவதற்காக சென்ற பிரவீன் அஷுபா ஜடேஜா, தனது முதலாளியை ஏமாற்ற மோசடி திட்டம் ஒன்றையும் போட்டுள்ளார்.

அதன்படி தான் வாங்கி வந்த 40 ஆயிரம் பணத்தை யாரோ திருடி சென்று விட்டார்கள் என போலீஸ் மற்றும் அவரது முதலாளியையும் அவர் நம்ப வைத்துள்ளார். ஆனால் அவரிடம் நடைபெற்ற விசாரணையில் பணத்தை தானே எடுத்து வைத்துக் கொண்டு மோசடி நாடகத்தில் ஈடுபட்டதும் அம்பலமானது. இதனைத் தொடர்ந்து பிரவீனை கைது செய்து போலீசார், நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தி உள்ளனர்.

தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்த பிரவீன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமுறைவாகி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து, சுமார் 15 ஆண்டுகள் கழித்து பிரவீன் குஜராத் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் தலைமறைவாக இருந்து வாழ்ந்து வருவதும் தெரிய வந்தது. பழைய வழக்கு தொடர்பாக தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், பிரவீன் இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

பண மோசடியில் ஈடுபட்டு வெளியூரில் தலைமுறைவாகி இருந்த பிரவீன், தன்னுடைய பெயரையும் பலமுறை மாற்றி வைத்து தனது முக அடையாளங்களையும் அவ்வப்போது மாற்றி வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், அவரது தங்கப்பல் ஒரு ஆதாரம் போல இருந்தது. இதன் பின்னர் சந்தேகத்திற்கு இடமாக இருந்த பிரவீனை தொடர்பு கொண்ட போலீசார், எல்ஐசி ஏஜென்ட் போல நடித்து பண ஆசை காட்டி அவரை மும்பைக்கும் வர வைத்துள்ளனர்.

இதனிடையே, மும்பையில் அழைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவரது தங்கப்பல் மூலம் பிரவீன் அடையாளம் காணப்பட்டு அவர் தான் 2007 ஆம் ஆண்டு பண மோசடியில் ஈடுபட்ட நபர் என்பதும் உறுதியானதாக தகவல்கள் கூறுகின்றது.

Also Read | கல்யாணம் நெருங்கிய நேரத்துல நடந்த அசம்பாவிதம்.. "விடுறா வண்டிய ஹாஸ்பிடலுக்கு".. மாலையும், தாலியுமா கிளம்பிய மாப்பிள்ளை..

MUMBAI, MUMBAI POLICE, GOLDEN TEETH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்