"55 வயசுக்கு மேல இருக்கும் போலீஸ்காரங்களுக்கு சம்பளத்துடன் லீவு!" - மும்பை காவல்துறையின் சமயோஜித அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து காக்கும் வகையில் மும்பையில் 55 வயதுக்கும் மேற்பட்ட போலீசாரும், ஏற்கனவே உடல்ரீதியான பல சிரமங்களை சந்தித்து வரும் போலீஸாரும் விடுப்பில் செல்லலாம் என்று மும்பை போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.‌

கொரோனா வைரஸால் இதுவரை மகாராஷ்டிராவில் 369 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 8500 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 3 போலீஸார் கொரோனா வைரஸால் உயிரிழந்ததை அடுத்து 55 வயதுக்கு மேற்பட்ட போலீஸார் விடுப்பில் செல்லலாம் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த போலீஸார், அனைவருமே 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால் மீதமுள்ள போலீஸாரையும் அவரது குடும்பத்தையும் காக்கவேண்டி 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் ஏற்கனவே உடல்ரீதியான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் விடுப்பு எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். 50 வயதுக்கு மேற்பட்ட போலீஸாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர்கள் பாதிப்பில் இருந்து மீள்வது கடினம் என்பதால் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டதாக மும்பை காவல் துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் விடுப்பில் செல்லும் போலீஸாரின் சம்பளம் எதுவும் பிடித்தம் செய்யப்படாது என்றும் அவர்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்