10 ரூபா தான், 'ஆன்லைன்'ல pay பண்ணிடுங்க... 'ஊறுகா'வ டெலிவர் பண்ணிடலாம்... - போனில் மெஸேஜ் தட்டிய இளம்பெண்ணுக்கு காத்திருந்த ‘அதிர்ச்சி’!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மும்பை பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வீட்டிலிருந்தே ஊறுகாய் விற்பனை செய்து வரும் பெண்மணி ஒருவர், போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

பொதுவாக மும்பை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஊறுகாய் விற்பனை செய்து வரும் அவருக்கு உத்தரப் பிரதேச மாநிலம் பனாரஸ் பகுதியில் இருந்து ஆர்டர் ஒன்று வந்துள்ளது. இதன் காரணமாக, மற்ற மாநிலங்களில் எப்படி ஊறுகாயை கொரியர் செய்வது என ஆன்லைனில் தேடியுள்ளார். அப்போது கிடைத்த தொலைபேசி எண் ஒன்றிற்கு அழைத்த போது, மறுமுனையில் பேசிய நபர், 10 ரூபாய் செலுத்தி தங்களது 'ஆப்'பில் நுழைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், அப்படி செய்து 'ஆப்'பிற்குள் நுழைந்தால் உங்களுக்கு நிறைய சலுகைகள் கிடைக்கும் என மறுமுனையில் பேசிய நபர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, பெண்ணின் எண்ணிற்கு லிங்க் ஒன்று வந்துள்ளது. அதனை க்ளிக் செய்து, உள்ளே பெண் நுழைய, அதில் பதிவு செய்து முடியும் வரை, அழைப்பில் இருக்க வேண்டும் என பெண் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

அடுத்து அந்த பெண், ஆப்பை டவுன்லோட் செய்து 10 ரூபாய் செலுத்த முயற்சித்துள்ளார். ஆனால், பணம் செலுத்த முடியவில்லை. அப்போது மறுமுனையில் இருந்த நபர், நெட்வொர்க் பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார். சில நிமிடங்கள் அழைப்பில் அந்த பெண் காத்திருக்க, அவரது செல்லுக்கு வந்த குறுஞ்செய்தியை கண்டு அவர் திகைத்துப் போனார்.

அவரது வங்கி கணக்கில் இருந்து 81,000 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. உடனடியாக தனது ATM கார்டை பிளாக் செய்த பெண், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு புகாரளித்துள்ளார்.  எந்த வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்