"ஏன்பா, அந்த Laptop-அ கொஞ்சம் குடு.." Open பண்ணி பாத்த அதிகாரிகள்.. "1 நிமிஷம் மிரண்டு போய்ட்டாங்க.."

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அவ்வபோது, இந்தியாவில் உள்ள விமான நிலையங்களான மும்பை, சென்னை, டெல்லி உள்ளிட்டவற்றில், வரும் பயணிகளை அங்கே சோதனையிடும் போது பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தெரிய வரும்.

Advertising
>
Advertising

அது மட்டுமில்லாமல், மிக மிக வினோதமாகவும், வித்தியாசமாகவும் பயணிகள் ஏதாவது பொருட்களை விமான நிலையம் கொண்டு வர முயன்று, வசமாக அதிகாரிகளிடம் சிக்கவும் செய்வார்கள்.

அந்த வகையில், மும்பை விமான நிலையத்தில் தற்போது பறிமுதல் செய்யப்பட்ட ஒரு விஷயம் கடும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக, துபாயிலிருந்து மும்பைக்கு விமானம் ஒன்று வந்துள்ளது. அப்போது, விமான நிலையம் வந்தடைந்த பயணிகளை வழக்கம் போல அங்கிருந்த சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு பார்த்துள்ளனர். அப்படி அங்கு வந்த பயணி ஒருவர் மீது, அதிகாரிகளுக்கு அதிகம் சந்தேகம் வலுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனால், அந்த பயணியை தனியாக அழைத்து வந்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அப்படி அவரிடம் இருந்த உடைமைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து சோதனை செய்த போது தான், ஒரு நிமிடம் அதிகாரிகள் அதிர்ந்து போயுள்ளனர். அப்போது துபாயில் இருந்து வந்த பயணியின் உடைமையில் இருந்த லேப்டாப் ஒன்றிற்குள் தங்க கட்டிகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. லேப்டாப் தவிர, ஸ்பீக்கர், வாட்ச் உள்ளிட்ட பொருட்களிலும் தங்கத்தை பதுக்கி வைத்து, அந்த பயணி கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது.

முன்னதாக இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைக்கவே, அவர்கள் உடனடியாக பயணிகளை சோதனை போட்டு, சரியாக அந்த பயணியையும் வசமாக சிக்க வைத்துள்ளனர். லேப்டாப்புக்குள் இருந்த தங்கம் தொடர்பான வீடியோ, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி பலரையும் பரபரப்புக்குள் ஆக்கியுள்ளது.

MUMBAI AIRPORT, GOLD, LAPTOP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்