'தொலைந்து 14 வருடம் கழித்து கிடைத்த பர்ஸ்'... 'ஆசையா பர்ஸை வாங்க போன நபர்'... பர்ஸை திறந்தபோது காத்திருந்த ட்விஸ்ட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நமக்கு மிகவும் பிடித்த அல்லது நெருக்கமான பொருள் ஏதாவது தொலைந்து விட்டால் அதனால் ஏற்படும் மனவருத்தம் என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று. அப்படி 14 வருடங்களுக்கு முன்பு தொலைந்த பர்சை போலீசார் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பை பன்வேல் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமந்த் பதால்கர். இவர் கடந்த 2006-ம் ஆண்டு மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பும்போது, ரயில் நிலையத்தில் தன் பர்சைத் தவறவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த பகுதியில் தனது பர்ஸை தேடிப் பார்த்தார். ஆனால் பர்ஸ் கிடைக்காத நிலையில், இது தொடர்பாக ரயில்வே காவல்துறையிடம் ஹேமந்த் புகார் அளித்தார். இதையடுத்து உங்களது பர்ஸ் தொடர்பாக ஏதாவது தகவல் கிடைத்தால் தகவல் அளிப்பதாக போலீசார் தெரிவித்தார்கள். ஆனால் கடந்த 14 வருடங்களாக ஹேமந்த்திற்கு எந்த தகவலும் வரவில்லை.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம்  ஹேமந்த் பதால்கருக்கு ஒரு போன் கால் வந்தது. அதில் பேசிய ரயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர், ''கடந்த 2006-ம் ஆண்டு நீங்கள் ரயில் நிலையத்தில் தொலைத்த உங்கள் பர்ஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வந்து பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்''. இதைச் சற்றும் எதிர்பாராத ஹேமந்த், இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிப் போனார். மேலும்  14 வருடங்களுக்குப் பிறகு தனது பர்ஸை பெற்றுக்கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். ஆனால் கொரோனாவால் ஊரடங்கு இருந்ததால், ரயில்வே போலீசாரை ஹேமந்த்தால் சந்திக்க முடியவில்லை. மும்பையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபின், ரயில்வே போலீசாரைச் சந்திக்க ஹேமந்த் சென்றார்.

ரயில்வே காவல்நிலையத்தில் ஹேமந்த் பதால்கரிடம் 14 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பர்ஸ், அதிலிருந்து 300 ரூபாயை போலீசார் ஒப்படைத்தனர். ஆனால் அதில் தான் ஒரு சிறிய ட்விஸ்ட் இருந்தது. இதுதொடர்பாக பேசிய ஹேமந்த் பதால்கர், ''14 ஆண்டுகளுக்குப் பின் ரயில்வே போலீசார் நான் தவறவிட்ட பர்சைக் கண்டுபிடித்துக் கொடுத்துள்ளார்கள். இதனை என்னால் நம்ப கூட முடியவில்லை.

நான் பர்சைத் தவறவிட்டபோது அதில் பழைய 500 ரூபாய் நோட்டு உள்பட ரூ.900 இருந்தது. 2016-ம் ஆண்டு 500 ரூபாய் செல்லாது என, அறிவிக்கப்பட்டதால் அந்தப் பணத்தை போலீசார் என்னிடம் தரவில்லை. அதற்குப் பதிலாக ரூ.300 ரூபாய் மட்டும் போலீசார் கொடுத்துள்ளார்கள். மேலும் செல்லாமல் போன 500 ரூபாயை மாற்றிக் கொடுக்கிறோம். அதையும் வந்து பெற்றுக்கொள்ளுங்கள்'' என போலீசார் கூறியதாக ஹேமந்த் பதால்கர் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்