மும்பை விமான நிலையத்தில் சோப் உள்ளே ரூ.25 கோடி மதிப்புள்ள போதை பொருட்களை பதுக்கி கடத்த முயன்ற பயணி கைது. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சோப் மூலமாக நூதனமாக கடத்தலில் ஈடுபட முயன்ற நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இந்த வீடியோ சமூக  வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

                          Images are subject to © copyright to their respective owners.

கடத்தல்

சமீப காலமாக வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதை பொருட்கள், வெளிநாட்டு பணம் உள்ளிட்டவற்றை கடத்திவரும் நபர்களை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்வது வாடிக்கையாகிவிட்டது. அதேபோல, இந்தியாவில் இருந்து வெளிநாட்டு பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களுடன் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சிக்கும் கடத்தல் நபர்களும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இப்படி கைதானவர்கள் கடத்தலுக்கு உபயோகிக்கும் வழிமுறைகள் மிகவும் வித்தியாசமானவையாக இருக்கும்.

Images are subject to © copyright to their respective owners.

ரகசிய தகவல்

அந்த வகையில் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் சோப் மூலமாக போதை பொருட்களை கிடைத்த முயன்ற நபரை அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர். முன்னதாக இந்த கடத்தல் குறித்து வருவாய் புலனாய்வு இயக்குநரகம், மும்பை மண்டல பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து, மும்பை விமான நிலையம் முழுவதும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
இந்த சூழ்நிலையில் எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாடா (Addis Ababa)-வில் இருந்து மும்பைக்கு வந்த பயணி மீது காவல்துறையினருக்கு சந்தேகம் வந்திருக்கிறது.

சோப்

அந்த பயணியின் உடமைகளை பரிசோதித்த விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அதனுள் 12 சோப்பு கட்டிகள் இருப்பதை கண்டறிந்துள்ளனர். அப்போது. அவை சாதாரண வெளிநாட்டு சோப்பு தான் என அந்த பயணி தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து அந்த சோப்பை அதிகரிகள் ஆய்வு செய்யும்போது அதன் உள்ளே போதை பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்திருக்கிறது.

Images are subject to © copyright to their respective owners.

வீடியோ

இதனையடுத்து அந்த பயணியை உடனடியாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் 2.58 கிலோ எடை இருந்ததாகவும் அதன் சந்தை மதிப்பு 25 கோடி ரூபாய் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட பயணியிடம் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சோப்புக்கு உள்ளே இருந்து போதை பொருட்களை அதிகாரிகள் வெளியே எடுக்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

 

MUMBAI, AIRPORT, VIDEO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்