'லிப்ட் ஓபன் ஆச்சு!... உள்ள போன உடனே பார்த்த நடுங்க வைக்கும் காட்சி'!.. பிரபல எலெக்ட்ரானிக்ஸ் கடை இயக்குனரின் இறுதி நிமிடங்கள்!.. பதைபதைக்க வைக்கும் கோரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பையில் பிரபல எலெக்ட்ரானிக்ஸ் கடை இயக்குனர் 'லிப்ட்' விபத்தில் சிக்கி பலியானார்.
மும்பை, நவிமும்பை, தானே, புனேயில் பல்வேறு இடங்களில் கோகினூர் (Kohinoor) என்ற பெயரில் பிரபல எலெக்ட்ரானிக்ஸ் கடை செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குனராக இருந்தவர் விஷால் மேவானி (வயது 46). இவர் தென்மும்பை ஜாஸ்லாக் ஆஸ்பத்திரி அருகில் வசித்து வந்தார். இவருக்கு நேற்று முன்தினம் பல் வலி ஏற்பட்டது.
இந்த நிலையில், ஒர்லி போச்கன்வாலா ரோட்டில் உள்ள நண்பரின் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டுக்கு தெரிந்த பல் டாக்டர் ஒருவர் வருவதாக கூறியிருந்தார். அவரிடம் சிகிச்சை பெறுவதற்காக அன்று மாலை 4.30 மணியளவில் விஷால் மேவானி நண்பரின் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றார்.
இதில் அவர் தரைதளத்தில் நின்று கொண்டு லிப்டுக்காக காத்திருந்தார். இந்தநிலையில் 'லிப்ட்' தரை தளத்துக்கு வருவதற்கு முன்பாகவே அதன் கதவு திறந்தது.
இதை கவனிக்காமல் விஷால் மேவானி உள்ளே சென்றார். பின்னர் சுதாரித்து கொண்டு அவர் வெளியே வருவதற்குள் மேலே இருந்து கீழே வந்த 'லிப்ட்' அவரை நசுக்கியது. இது குறித்து கட்டிடவாசிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் தீயணைப்பு துறையினருடன் விரைந்து சென்று, லிப்டில் சிக்கியிருந்த விஷால் மேவானியை மீட்டு பீரிச் கேண்டி தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு விஷால் மேவானியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
இந்த சம்பவம் குறித்து ஒர்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
பிரபல எலெக்ட்ரானிக்ஸ் கடை இயக்குனர் 'லிப்ட்' விபத்தில் பலியான சம்பவம் மும்பையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மற்ற செய்திகள்
‘10 வருஷமா பாதாள அறை.. பட்டினி’.. 7 பிள்ளைகளில் 5 பேருக்கு.. பெற்றோர் செய்த ‘உறைய வைக்கும்’ கொடூரம்!
தொடர்புடைய செய்திகள்
- மராட்டிய அரசுக்கு சவால் விடுத்த நடிகை கங்கனா ரணாவத்... அசைக்க முடியாத பாதுகாப்போடு மும்பை வருகிறார்!.. மத்திய அரசு அதிரடி!.. என்ன நடந்தது?
- குறுக்கே வந்த 'மாடு',,.. sudden 'பிரேக்' போட்டு நிறுத்திய 'டிரைவர்',,.. விபத்தில் சிக்கிய 'முன்னாள்' முதல்வரின் 'கார்',, பரபரப்பு 'சம்பவம்'!!!
- திடீரென கட்டுப்பாட்டை இழந்த அதிவேக கார்... சாலையோரம் நின்றவர்களை அடித்து வீசி... பதைபதைக்க வைக்கும் கோரம்... 5 பேர் பலி!
- 'குடி போதையில அது மேல விழுந்து இறந்துட்டாரு...' 'ஷாக் தந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்...' - விசாரணையில் வெளிவந்த அதிர வைக்கும் உண்மைகள்...!
- 'காசு அனுப்பு...' இல்ல உன் 'அந்த' வீடியோவ நெட்ல லீக் பண்ணிடுவேன்...! 'பெண்ணின் நூதன ஐடியா...' நடந்தது என்ன...? - வசமா மாட்டிகிட்ட இளைஞர்...!
- 'நலங்கு வச்சு களைகட்ட தொடங்கிய திருமண விழா'... 'ஜோராக வந்த சீர்வரிசை'... ஒரு செகண்டில் துக்க வீடாக மாறிய கல்யாண வீடு!
- 'அம்மாவ விட பெரிய சக்தி என்ன இருக்கு'... 'திடீரென சுருண்டு விழுந்த பெண்'... 'தாயை காப்பாற்ற 5 வயசு சிறுவன் செஞ்ச செயல்'... அசந்து போன போலீசார்!
- 'ரோட்டு சைட்-ல தூங்கிட்ருந்த மூணரை வயசு குழந்தை...' 'திடீர்னு பாலத்துக்கு அடியில அழுற சத்தம்...' - நெஞ்சை உறைய செய்யும் உச்சக்கட்ட கொடூரம்...!
- 'தங்கச்சி தான் எங்க உசுரு'... 'நடந்து போயிட்டு இருக்கும்போது வந்த அலறல் சத்தம்'... 'காப்பாற்ற ஓடிய 2 அண்ணன்கள்'... குடும்பத்தை புரட்டி போட்ட சோகம்!
- 'டாக்டர் ஆகி திரும்பி வருவான்னு நெனச்சோம்'... 'இப்படி கார்கோ பிளைட்ல உடல் மட்டும் வரும்ன்னு சத்தியமா நினைக்கல'... கதறிய பெற்றோர்!