கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளம்!.. ஸ்தம்பித்த ரயில் நிலையம்!.. வதந்தியால் வந்த விபரீதம்!.. என்ன நடந்தது?
முகப்பு > செய்திகள் > இந்தியாசிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக வெளியான வதந்தியை நம்பி புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் மும்பை ரெயில் நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக, பல்வேறு நகரங்களில் இருந்து ஷ்ராமிக் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்களில் பயணம் செய்வதற்கு, அந்தந்த பகுதிகளில் உள்ள அதிகாரிகளிடம் பெயரை பதிவு செய்ய வேண்டும். அதன்படி தொழிலாளர்கள், உரிய நடைமுறைகளின்படி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
அந்த வகையில், மகாராஷ்டிர மாநிலம் மும்பை பாந்த்ரா ரெயில் நிலையத்தில் இருந்து பீகார் மாநிலம் பூர்ணியா நகருக்கு இன்று ஷ்ராமிக் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயிலில் பயணம் செய்வதற்காக பதிவு செய்யப்பட்ட பயணிகள் சுமார் 1000 பேர் இன்று காலையில் ரெயில் நிலையத்திற்கு வந்துவிட்டனர்.
இதேபோல் பதிவு செய்யாமலும் ஏராளமானோர் ரெயில் நிலையத்திற்கு வந்தனர். ரெயில் நிலையம் அருகில் உள்ள பாலம் மற்றும் சாலையிலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு பதிவு செய்து, அதிகாரிகளால் அழைப்பு விடுக்கப்பட்ட தொழிலாளர்களை மட்டும் ரெயிலில் பயணம் செய்ய போலீசார் அனுமதித்தனர். மற்றவர்களை அங்கிருந்து போலீசார் கலைத்தனர். சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக அவசரம் அவசரமாக ஓடி வந்த தொழிலாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
பீகார் மற்றும் உத்தர பிரதேசத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக வதந்தி பரவியதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அங்கு திரண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வயிறு வலினு வந்து அட்மிட் ஆனாங்க... இப்ப இவங்க சொல்றது அதிர்ச்சியா இருக்கு'!.. கொரோனா மர்மம்!.. பெண் உயிரிழப்பால் பரபரப்பு!
- மீண்டும் 'மாயமாகி ' போன கிம்... உண்மையிலேயே 'உயிரோட' தான் இருக்கிறாரா?... வலுவான 'ஆதாரங்களை' முன்வைக்கும் வல்லுநர்கள்!
- சீனாவின் 'பீகிங்' மரபியல் 'ஆய்வுத்துறை' சார்பில் 'மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிப்பு...' '5 நாட்களில்' கட்டுப்படுத்துவதாக 'விளக்கம்...'
- 'கொரோனா தடுப்பூசி ஃபெயிலியர்...' 'டெஸ்ட் பண்ணின குரங்குகளுக்கு கொரோனா...' 'சோதனைக்கு வந்த சோதனை...' விஞ்ஞானிகள் அதிர்ச்சி...!
- நோய் தடுப்பு பணிக்காக... கட்டுப்பாடு பகுதிகளை தீவிரமாக கண்காணிக்கும் அரசு!.. இறுதியில் 'கொரோனா' கொடுத்த 'ட்விஸ்ட்'!.. என்ன நடக்கிறது சென்னையில்?
- 'மருந்து கண்டுபிடிக்கும் முன்பே...' 'கொரோனா வைரஸ்' தானாக 'அழிந்துவிடும்...' 'ஆறுதல் அளிக்கும் விஞ்ஞானியின் கூற்று...'
- தமிழகத்தின் காய்கறிச் சந்தைகளில் 'கண்ணாமூச்சி' ஆடும் கொரோனா!?.. 'ஹாட் ஸ்பாட்' உருவாவது எப்படி?.. நெஞ்சை உலுக்கும் பின்னணி!
- 'ஒரு வாரத்திற்கும்' மேலாக 'மாத்திரை' போட்டு வருகிறேன்... உங்களுக்கும் வந்துடுச்சா 'மிஸ்டர் பிரசிடெண்ட்...' 'ட்ரம்பின் அசர வைக்கும் பதில்...'
- கொரோனா நோயாளிகளுக்கு ‘ஷாக்’ கொடுத்த ஒரு மெசேஜ்.. மன்னிப்பு கேட்ட நாடு..!
- "13.5 கோடி இந்தியர்களுக்கு வேலை பறிபோகும்!".. "இதுலயும் 12 கோடி பேரின் நிலை இதுதான்!".. 'வயிற்றில் புளியைக் கரைக்கும் அறிக்கை'!