பிறந்த குழந்தைக்கு ‘மோடியின்’ பெயரைச் சூட்டிய முஸ்லீம் தாய் சொல்லும் காரணம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாவாக்கு எண்ணிக்கை தினமான கடந்த மே 23-ஆம் தேதி தனக்கு பிறந்த குழந்தைக்கு மோடியின் பெயர் வைத்து அழகு பார்த்துள்ளார் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லீம் தாய் ஒருவர்.
உத்திரப் பிரதேசம் மாநிலம், கோண்டா மாவட்டத்தில் உள்ள பர்சாபூர் மஹ்ரார் என்கிற கிராமத்தைச் சேர்ந்த முஸ்லீம் தாய் மெயினஜ் பேகம். இவரது கணவர் முஷ்டாக் அகமது துபாயில் வேலைபார்க்கிறார். இந்த தம்பதிக்கு கடந்த 23-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தைக்கு, குழந்தையின் தாய் மெயினஜ் பேகம் நரேந்திர மோடியின் பெயரை வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். காரணம் மோடியின் நலத்திட்டங்களால் கவரப்பட்டவர் மெயினஜ் பேகம். அதனால் வாக்கு எண்ணிக்கை நாளான 23-ஆம் தேதி அதிக வாக்குகள் பெற்று அமோகமாக வெற்றி பெற்ற பாஜக பிரதமர் வேட்பாளர் மோடியின் முழுப்பெயரையும் தனக்கு பிறந்த குழந்தைக்கு சூட்டி மகிழ்ந்துள்ளார் மெயினஜ் பேகம்.
முதலில் எதிர்ப்பு தெரிவித்த முஷ்டாக் அகமது, பின்னர் மனைவியின் விருப்பத்துக்கு விட்டிருக்கிறார். அதனால் மெயினஜ் பேகம் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி எனும் பெயரை தன் குழந்தைக்கு சூட்டியதோடு, அந்த பெயரை பதிவு செய்யும் பொருட்டு எழுதித் தந்த மனுவில், மோடியின் இலவச காஸ் இணைப்பு, கழிவறைக் கட்டுவதற்கான மானியம், முத்தலாக் தடைச் சட்டம் உள்ளிட்ட திட்டங்களை வெகுவாக பாராட்டியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- எம்.பி.யான இன்ஸ்பெக்டர்... முன்னாள் டி.எஸ்.பி.க்கு சல்யூட்... வைரலான புகைப்படம்!
- சுட்டுக்கொன்றவர்களுக்கு தண்டனை.. உதவியாளரை சுமந்து சென்ற ஸ்மிருதி இரானி ஆவேசம்!
- ‘அட இப்டியும் ஒரு எம்.பியா’?.. ‘ஆச்சரியமூட்டும் எம்.பியின் செயல், பாராட்டும் மக்கள்’!
- 'இந்த சின்ன வயசுல' எம்.பி ஆகி அரசியல் பொறுப்புடன் மக்களவைக்கு செல்லும் முதல் பெண்!
- ‘வெள்ளையா இருக்கவரு பொய் சொல்ல மாட்டாருன்னு’ நம்பி ஓட்டு போட்ருக்காங்க.. தேர்தல் முடிவு குறித்து சீமான் ஆவேசம்..
- நாங்கள் ஏற்கனவே அறிவித்தை போல.. பரபரப்பான வெற்றிக்கு பின் தொல்.திருமாவளவன்!
- ‘எனக்கு அவருதான் முக்கியம்’!..‘தாத்தாவுக்காக நான் ஜெயிச்ச எம்.பி பதவிய ராஜினாமா செய்றேன்’!
- '13 வருஷம் வனவாசம் போனவங்கலாம் இருக்காங்க.. எங்களுக்கு 14 மாசம்தானே?'!
- 'மாம்பழத்துக்கு மவுசு குறைகிறதா?'... '7 இடங்களிலும் தோல்வி'!
- 'தனியொருவன்'.. அதிமுகவின் அந்த 'ஒரு தொகுதியில்' வெற்றி பெற்ற வேட்பாளர்.. எவ்வளவு வாக்குகள்?