ஒரே நாள்ல ரூ.1 லட்சம் கோடி க்ளோஸ்!.. இதுவரை இல்லாத அளவுக்கு... அம்பானிக்கு வந்த பெரும் சோதனை!.. என்ன நடந்தது?
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் மிகப்பெரும் செல்வந்தர் முகேஷ் அம்பானி இன்று ஒரே நாளில் 5 பில்லியன் டாலர்களை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட வர்த்தக மற்றும் பொருளாதாரப் பாதிப்பில் இந்திய மக்களும், இந்திய நிறுவனங்களும் மோசமான சூழ்நிலையை எதிர்கொண்ட போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், தனது டெலிகாம் மற்றும் ரீடைல் வர்த்தகத்தை விரிவாக்கும் முயற்சியாக இப்பிரிவு பங்குகளை விற்பனை செய்து 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியை முதலீடாகப் பெற்றுப் பங்குச்சந்தையில் தாறுமாறான வளர்ச்சியைக் கண்டது.
இந்நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது மோசமான காலாண்டு முடிவுகள் மற்றும் பியூச்சர் ரீடைல் ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளால், இந்நிறுவனத்தின் பங்குகள் மிகவும் மோசமான சரிவை எதிர்கொண்டுள்ளது.
திங்கட்கிழமை பங்குச்சந்தை வர்த்தகத்தின் ஒரு நாள் சரிவில் ஏற்பட்ட பாதிப்பு, முகேஷ் அம்பானி சொத்து மதிப்பில் சுமார் 5 பில்லியன் டாலர் அளவிலான சரிவை ஏற்படுத்தியுள்ளது.
இதுமட்டும் அல்லாமல், இந்நிறுவன முதலீட்டாளர்கள் இன்று ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை இழந்துள்ளனர்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரர் ஆக விளங்கும் முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்த லாக்டவுன் காலத்தில் மட்டும் அதிகளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் புதிய நம்பிக்கையைக் கொடுத்தது.
ஆனால் இன்றைய வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சரிவு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் 3 மாத உயர்வை முற்றிலுமாகக் குறைத்துள்ளது.
செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டு முடிவுகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லாபத்தில் 15 சதவீத சரிவையும், வருமானத்தில் 24 சதவீத சரிவையும் பதிவு செய்துள்ளது.
இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் காலாண்டு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சியின் வெளிப்பாடு தான் இன்றைய வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள 7.8 சதவீத சரிவு.
இக்காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் சுத்திகரிப்புப் பிரிவில் கிடைத்த வருமானம் மற்றும் பெட்ரோல், டீசல் வர்த்தகத்தில் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்புகள் பெரிய அளவிலான வருவாய் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சக்கையாக பிழிந்து எடுத்த கொரோனா ஊரடங்கு... சோர்ந்து போன ஊழியர்களுக்கு... நிறுவனங்கள் இன்ப அதிர்ச்சி!.. அதிலும் 'இந்த' பிரபல நிறுவனத்தின் அறிவிப்பு டாப்!
- 'என்னதான் அதிரடி.. சேல் ஆஃபர் கொடுத்தாலும்..'.. 'இந்த விஷயத்துனால'.. லைட்டா ஒரு 'ஜர்க்'! அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு புதிய நெருக்கடி?
- 'ஜியோவின் அடுத்த அதிரடி'... 'இனிமேல் ஸ்பீட் மட்டும் எப்படி இருக்கும்னு பாருங்க'... எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்!
- 'ஒவ்வொரு மணி நேரத்துக்கும் எத்தனை கோடி?'... 'லாக்டவுன் நேரத்திலும் மலைக்க வைத்த முகேஷ் அம்பானி'... வெளியான பட்டியல்!
- ‘இதுவரைக்கும் யாரும் இத பண்ணதில்ல’!.. ‘கொடுத்த வாக்கை நிறைவேத்திட்டேன்’.. முகேஷ் அம்பானி சந்தோஷத்துக்கு காரணம் என்ன?
- முகேஷ் அம்பானி ‘Right Hand’.. வெற்றிக்கு மூளையாக செயல்படும் ‘ஓர் நபர்’.. அதிகம் வெளியே தெரியாத இவர் யார்..?
- ஊரடங்கால் சரிந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி!.. 'அம்பானி' போட்ட மாஸ்டர் ப்ளான்!.. அலறும் போட்டியாளர்கள்!.. தெறிக்கவிடும் புதிய திட்டம்!
- கொரோனாவால் அம்பானி இழந்தது எவ்வளவு தெரியுமா?... டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து காணாமல் போன இந்தியர்கள் யார்?... கடும் நெருக்கடியில் இந்திய நிறுவனங்கள்!
- ‘ஏடிஎம் மெஷினிலேயே’... ‘இனி மொபைல் எண்ணுக்கு ரீசார்ஜ் செய்யலாம்’... 'புதிய வசதியை அறிமுகப்படுத்திய நிறுவனம்’!
- ‘2 வாரத்தில் 100 படுக்கைகள் கொண்ட ஹாஸ்பிட்டல்’.. ‘WorkFromHome பார்ப்பவர்களுக்கு ஜியோ மூலம்..!’.. வெளியான அதிரடி அறிவிப்பு..!