'ஒவ்வொரு மணி நேரத்துக்கும் எத்தனை கோடி?'... 'லாக்டவுன் நேரத்திலும் மலைக்க வைத்த முகேஷ் அம்பானி'... வெளியான பட்டியல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

முகேஷ் அம்பானி இந்தியா பணக்கார பட்டியல் 2020 இல் தொடர்ச்சியாக ஒன்பதாவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பொது முடக்கம் ஆரம்பித்ததில் இருந்து முகேஷ் அம்பானி ஒவ்வொரு  மணி நேரத்திற்கும்  90 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளதாக ஐஐஎஃப்எல் வெல்த் ஹுருன் தகவல் வெளியிட்டுள்ளது. இதன் பட்டியலில் தொடர்ச்சியாக ஒன்பதாவது ஆண்டாகப் பணக்கார இந்தியர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இவர் இடம்பெற்றுள்ளார்.

உலகின் முதல் 5 பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள  ஒரே இந்தியரான முகேஷ்  அம்பானி, பேஸ்புக், கூகுள், சில்வர் லேக் போன்றவற்றிலிருந்து தொடர்ச்சியான  வருவாய் ஈட்டல் மற்றும்  முதலீடு  மூலமாக இவரின் சொத்துமதிப்பு 2,77,700 கோடி ரூபாய் அதிகரித்து தற்போது 6,58,400 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. முகேஷ் அம்பானியின் மொத்த  சொத்துமதிப்பு என்பது , இப்போதைய இந்தியப் பணக்காரர்கள்  பட்டியலில் அவருக்கு அடுத்த இடங்களில் உள்ள  ஐந்து பேரின் ஒருங்கிணைந்த சொத்துமதிப்பை விடவும் பெரியது, இது அவரை ஆசியாவின்  முதல் பணக்காரராகவும், உலகின் நான்காவது பணக்காரராகவும் ஆக்குகிறது என்று  இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஐ.எஃப்.எல் ஹுருன் இந்தியா வெளியிட்டுள்ள பட்டியலில் ரூ .1,000 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட சொத்துக்களைக் கொண்ட பணக்கார நபர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த ஆண்டு இப்பட்டியலில் 828 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன, அதில் 627 பேர் கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு அவர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்