விபத்தில் சிக்கிய 'இளைஞர்'.. "அந்த ஜேசிபி'ய எடுத்தா தான் சரி வரும்".. மருத்துவமனைக்கு பறந்த வண்டி!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இளைஞர் ஒருவர் பைக் விபத்தில் சிக்கிக் கொண்ட நிலையில், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சேர்ப்பதற்காக எடுத்த முயற்சி தான், தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ராணி எலிசபெத்துக்காக.. 30 வருஷம் முன்னாடியே தயாரான சவப்பெட்டி.. "அதுக்குள்ள இத்தன விஷயம் வேற இருக்கா?"

மத்திய பிரதேச மாநிலம், கட்னி மாவட்டத்தில் உள்ள கிடௌலி சாலை அருகே இளைஞர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக விபத்து ஒன்றிலும் அந்த இளைஞர் சிக்கி உள்ளார். இதனால், அந்த இளைஞர் உடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அப்படி இருக்கையில், உடனடியாக அங்கிருந்தவர்கள் இளைஞரை மருத்துவமனை கொண்டு செல்வதற்காக ஆம்புலன்ஸ் ஒன்றையும் அழைத்துள்ளனர்.

இதற்கு மத்தியில், ஆம்புலன்ஸ் வருவது காத்திராமல் அங்கிருந்த நபர் அதிரடி முடிவு ஒன்றை கையில் எடுத்துள்ளார். உள்ளூர் பஞ்சாயத்து உறுப்பினரும், ஜேசிபி இயந்திரத்தின் உரிமையாளருமான புஷ்பேந்திர விஸ்வகர்மா என்பவரின் கடை அருகே தான் அந்த இளைஞர் விபத்தில் சிக்கி உள்ளார். இளைஞரன் நிலையை பார்த்து, ஆம்புலன்ஸ் வருவது வரை காத்திருக்க வேண்டாம் என புஷ்பேந்திர விஸ்வகர்மா வேறொரு முடிவை எடுத்துள்ளார்.

அதன்படி, தனக்கு சொந்தமான ஜேசிபி இயந்திரத்திலேயே இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கும் கொண்டு செல்ல விஸ்வகர்மா முன் வந்துள்ளார். ஜேசிபி இயந்திரத்தின் மணல் ஏற்றிச் செல்லும் பகுதியில் விபத்துக்கு உள்ளான இளைஞரை ஏற்றி மருத்துவமனைக்கும் கொண்டு சேர்த்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அந்த இளைஞருக்கு அதே மருத்துவமனையில் வைத்து சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டது. விபத்துக்குள்ளான நபரை ஜேசிபி இயந்திரத்தில் ஏற்றி மருத்துவமனை கொண்டு சென்றது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | திருட போன வீட்டை தண்ணீர் ஊற்றி சுத்தம் பண்ணிய "அடடே.." திருடர்கள்!!..

ACCIDENT, MADHYA PRADESH, YOUNG MAN, HOSPITAL, JCB

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்