‘குழந்தையின் முகத்தைக் காட்ட மறுத்த தாய்’.. ‘கீழே விழுந்ததைப் பார்த்து’.. ‘அதிர்ந்து போய் நின்ற டாக்டர்கள்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்தியப்பிரதேச மாநிலத்தில் பிரசவமான பெண்களுக்கென சிறப்பு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

மத்தியப்பிரதேச மாநிலம் மொரேனோ பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 3 பெண்கள் ஆம்புலன்ஸில் வந்துள்ளனர். அதில் ஒரு பெண் கையில் துணியால் சுற்றப்பட்ட குழந்தையுடன் வந்து பிரசவமானவர்களுக்கு அரசு வழங்கும் நிதியுதவிக்கு விண்ணப்பிக்க முயற்சித்துள்ளார்.

அப்போது அங்கிருந்த செவிலியர் ஒருவர் அந்தப் பெண்ணிடம் குழந்தையைக் காட்டுமாறு கேட்க, குழந்தை இறந்தேதான் பிறந்தது என அவர் கூறியுள்ளார். தொடர்ந்து செவிலியர் எவ்வளவு கேட்டும் அந்தப் பெண் குழந்தையின் முகத்தைக் காட்ட மறுத்துள்ளார். இதைத்தொடர்ந்து மருத்துவர்களுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட, அவர்களும் அங்கு வந்து அந்தப் பெண்ணிடமிருந்த குழந்தையைப் பார்க்க முயற்சித்துள்ளனர்.

அப்போது திடீரென துணியால் சுற்றப்பட்டிருந்த குழந்தை கீழே விழுந்துள்ளது. இதனால் அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்து கீழே பார்க்க அவர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அந்தப் பெண்ணிடமிருந்து கீழே விழுந்தது குழந்தையே அல்ல. அவர் கோதுமை மாவைப் பிசைந்து, அதை பச்சிளம் குழந்தையைப் போல உருட்டி, அதற்கு வண்ணம்தீட்டி, துணியால் சுற்றி மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளார்.

பிரசவிக்கும் பெண்களுக்கு மாநில அரசு வழங்கும் 16 ஆயிரம் ரூபாய் நிதியுதவிக்காகவே அந்தப் பெண் இப்படி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் அந்த 3 பெண்களும் கண்ணீர் விட்டு அழத் தொடங்கியதால் அவர்களின் ஏழ்மை நிலை கருதி போலீஸாரும் அவர்களை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

MP, GOVERNMENT, HOSPITAL, MOTHER, BABY, DOUGH, SHOCKING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்