"சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஆகியே தீருவேன்".. சிறு வயதில் பறிபோன பார்வை.. "இளைஞருக்கு கெடச்ச வேலை'ய பாத்து திரும்பி பார்த்த நெட்டிசன்கள்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கிடைத்த வேலை வாய்ப்பு தொடர்பான செய்தி, பலரையும் சபாஷ் போட வைத்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | நீச்சல் குளத்தில் விழுந்து தத்தளித்த தாய்.. ஓடிவந்து காப்பாற்றிய 10 வயது சிறுவன்.. நெகிழ வைத்த வீடியோ!!

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான யாஷ் சோனகியா என்ற இளைஞர், தன்னுடைய எட்டு வயதிலேயே பார்வையை இழந்ததாக கூறப்படுகிறது.

பி டெக் படிப்பை யாஷ் முடித்துள்ள நிலையில், கிளூகோமா மூலம் பார்வையை இழந்ததாக கூறப்படுகிறது.

அப்படி இருக்கையில், ஸ்க்ரீன்-ரீடர் மென்பொருளின் உதவியுடன் படிப்பை முடித்த யாஷ், கோடிங்கை கற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்னர், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலை தேடியும் வந்துள்ளார் யாஷ். தொடர்ந்து, ஆன்லைன் மற்றும் நேர்காணலுக்கு பிறகு, அதே நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளர் பதவிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அதுவும் ஆண்டுக்கு 47 லட்ச ரூபாய் சம்பளத்துடன் யாஷுக்கு இந்த வாய்ப்பு முன்னணி நிறுவனமான மைக்ரோசாஃப்ட்டில் கிடைத்துள்ளது. இது பற்றி, யாஷ்பால் நகரில் கேன்டீன் நடத்தி வரும் யாஷின் தந்தை பேசுகையில், "பிறந்த ஒரு நாளுக்கு பிறகு எனது மகனுக்கு கிளூகோமா இருப்பது கண்டறியப்பட்டது. அதன் காரணமாக, அவரது கண்களில் பார்வை குறைவாக இருந்தது. இதன் பின்னர், எனது மகன் எட்டு வயதை எட்டிய போது, பார்வையை முழுமையாக அவர் இழந்து விட்டார். ஆனால், அவர் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேண்டும் என்ற ஆசையை அவர் கைவிடவே இல்லை" என கூறி உள்ளார்.

ஆண்டுக்கு 47 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வேலை வாய்ப்பை யாஷ் ஏற்றுக் கொண்டதாகவும், ஆரம்பத்தில் அவர் வீட்டில் இருந்து வேலை செய்யும் படியும் பின்னர் அவர் பெங்களூரில் உள்ள அலுவலகத்திற்கு பணிக்கு சேர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

யாஷ் சோனகியா என்ற இளைஞர், சிறு வயதில் பார்வையை இழந்த போதிலும் சாஃப்ட்வேர் இன்ஜினியராக மாற வேண்டும் என்ற விருப்பத்தில் கொஞ்சம் கூட தன்னை சமரசம் செய்யாமல், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனத்தில் வேலையும் கிடைத்து சாதித்துள்ள விஷயம், பலருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

Also Read | பிரான்சில் இருந்து புதுச்சேரிக்கு பறந்து வந்து.. பெண்ணை கரம்பிடித்த 54 வயது நபர்.. வைரலாகும் திருமண வீடியோ!!

MADHYA PRADESH, VISUALLY IMPAIRED TECHIE, MICROSOFT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்