VIDEO: ஏலேலோ ஐலசா, ஹேய் தள்ளு... தள்ளு...! 'ட்ரெயின்'லாம் எங்களுக்கு 'ஆட்டோ' மாதிரி தான்...! - பட்டிதொட்டியெங்கும் 'டிரெண்டிங்' ஆகும் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்தியப் பிரதேசத்தில் பழுதான ரயில் ஒன்றை ஊழியர்கள், பொதுமக்கள் தள்ளி சென்ற வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பழுதடைந்து நிற்கும் பைக், ஆட்டோ, கார், பேருந்து, உள்ளிட்டவற்றை தள்ளி செல்லும் காட்சிகளை நாம் அடிக்கடி காண்பதுண்டு. ஆனால், மத்தியப் பிரதேச மாநிலத்தில் பழுதடைந்த ரயிலை ஊழியர்கள், பொதுமக்கள் சேர்ந்து தள்ளி சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ரயில்களை இயங்கும் மின்சார வயர்களை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஹர்தா என்ற இடத்தில் அந்த ரயிலில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ஊழியர்கள் மற்றும் அப்பகுதியாக சென்றுக் கொண்டிருந்த பொதுமக்கள் என சுமார் 30-க்கும் மேற்பட்டோர் ஒரு தண்டவாளத்தில் இருந்து மற்றொரு தண்டவாளத்துக்கு ரயில் பெட்டியை கைகளால் தள்ளி சென்றனர்.

இந்த வீடியோ வெளியாகி தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதேசமயம், இது கடுமையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. தண்டவாளங்களில் இருக்கும் கூர்மையான கற்களை மிதித்தவாறு அவர்கள் ரயில் பெட்டியை தள்ளி சென்றுள்ளனர். அதில் சிலர் செருப்பு கூட அணியாமல் நிற்கின்றனர். வேறு ஏதாவது ஒரு இழுவண்டியை அழைத்து பழுதடைந்த ரயிலை இழுத்துச் செல்லாமல் பொதுமக்களையும், ஊழியர்களையும் பயன்படுத்தியது தவறு என விமர்சனமும் எழுந்துள்ளது.

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சம்பவத்தால் அந்த வழியாக செல்லும் சில ரயில்கள் தாமதமாக சென்றுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்