VIDEO: அப்பா, ஒருநாள் 'நீ கேட்டத' வாங்கி தருவேன்மா...! 'அன்னைக்கு இந்த ஊரே நம்மள பார்க்கும்...' - கொடுத்த 'வாக்கை' நிறைவேற்றிய தந்தை...!
முகப்பு > செய்திகள் > இந்தியாடீக்கடை நடத்தி வருபவர் ஒருவர், தனது 5 வயது மகளின் கல்விக்காக செய்த காரியம் இஇணையதளங்களில் டிரெண்டிங் ஆக மாறியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரியில் டீ வியாபாரம் செய்து வரும் நபர் ஒருவர், ரூ.12,500 கொடுத்து ஒரு ஸ்மார்ட்ஃபோனை வாங்கியுள்ளார். இன்று நாடு முழுவதும் பல கோடி பேர் ஸ்மார்ட்ஃபோன் வைத்துள்ளனர். ஆனால் இவர் வாங்கிய முதல் ஸ்மார்ட்ஃபோன் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தனை வருடங்கள் காத்திருந்து ஸ்மார்ட்போன் வாங்கிய மகிழ்ச்சியில் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. தனக்கு தெரிந்த நண்பர்களுக்கு எல்லாம் அந்த போனில் இருந்து அழைத்து மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்துக் கொண்டார். ஒரு சாமானியனாக இருந்துக் கொண்டு, தன்னுடைய உழைப்பினால் சிறுக சிறுக சேமித்து ஒரு தொழில்நுட்பத்தை சொந்தமாக ஆக்கும்போது வரும் பூரிப்பு அது.
அதை சிறப்பாக கொண்டாடாமல் விட்டால் எப்படி? ஸ்மார்ட்ஃபோன் வாங்கி, அதை, தனது மகளின் கையில் கொடுத்து, ஒரு குதிரை வண்டியில் மகளை அமரவைத்து அலங்காரம் செய்து, வீட்டின் முன்னால் நடனமாடி, பேண்ட் வாத்தியங்கள் முழங்க, தேநீர் வியாபாரி கொண்டு வந்த விடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து முராரி குஷ்வாஹா கூறும்போது, என்னுடைய மகள் அடிக்கடி ஸ்மார்ட்ஃபோன் கேட்டுக் கொண்டிருந்தாள். அவரிடம் சொல்லும்போதெல்லாம் கண்டிப்பாக விரைவில் வாங்கித் தருகிறேன்.
நாம் ஸ்மார்ட்ஃபோன் வாங்கும் போது அதை இந்த ஊரே பார்த்து வியக்கும் விதமாக கொண்டாடுவோம் என்று கூறுவேன். உண்மையிலேயே நான் ஸ்மார்ட்ஃபோன் வாங்கும் போது அதை நடைமுறைப்படுத்த திட்டமிட்டு, இவ்வாறு குதிரை வண்டி, பேண்டு வாத்தியம், ஆட்டம் பாட்டம் என கொண்டாடி நானும் என் மகளும் மகிழ்ந்துள்ளேன். இனிமேல் என் மகள் கல்வி கற்க சிரமம் குறைந்துள்ளது தான் கூடுதல் மகிழ்ச்சி என அவர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இந்த’ ஆப்ஸ் எல்லாம் மொபைல் போன்ல இருக்கா? உடனே ‘டெலிட்’ பண்ணிடுங்க..!
- “ஏர்டெல், வோடஃபோன், ஜியோ…இங்க வாங்க”- வச்சு செய்த வாடிக்கையாளர்கள், வெளுத்து வாங்கும் ட்ராய்..!
- இளைஞர்களுடன் ‘டேட்டிங்’.. காலேஜில் பல லட்சம் ஸ்காலர்ஷிப்.. மகளையே ஏமாற்றி அதிர வைத்த அம்மா..!
- இப்படியே தான் வாழ்க்கை முழுக்க கஷ்டப்படணுமா...? 'உடைஞ்சு போயிருந்த நேரத்துல கெடச்ச சின்ன கல்...' - அதிர்ஷ்டம் எப்படி வரும்னு 'யாருக்கு' தெரியும்...?
- குறைந்த கட்டணங்களில் சிறப்பு ப்ரீபெய்டு திட்டங்கள்… BSNL வழங்கும் கவர்ச்சிகர ஆஃபர்..!
- Xiaomi முதல் OnePlus வரையில்… 40% தள்ளுபடி உடன் அமேசான் போன் திருவிழா..!
- 'கணவர் கிட்ட கோடி கோடியா சொத்து இருக்கு...' 'கோடீஸ்வரரோட' மனைவியா இப்படி 'ஒரு காரியத்தை' செஞ்சாங்க...? - உடைந்து நொறுங்கிய கணவன்...!
- நான் 'கல்யாணம்' பண்ணிட்டேன் அப்பா...! 'ப்ளீஸ், எங்கள விட்ருங்க...' 'தரதரவென இழுத்து சென்ற தந்தை...' 'கதறி துடித்த மகள்...' - கடைசியில் நடந்தது என்ன...?
- சாமி, எப்படியாச்சும் எங்க 'அப்பா'வோட 'டீம' ஜெயிக்க வச்சிடு...! 'மேட்ச் நடுவில தோனி மகள் செய்த காரியம்...' - டிரெண்ட் ஆகும் ஃபோட்டோ...!
- 'டாடி உன்ன பார்க்க வந்துடுவாரு மா...' 'மகள் பிறக்க 2 வாரமே இருந்த நிலையில்...' ஆப்கானில் இருந்து பூகம்பமாக வந்த செய்தி...' - நெஞ்சை 'உருக' வைத்த அம்மா...!