‘9 நாள் லீவ் கேட்ட எம்.பி’.. இதுல ரெண்டு பேருக்குமே ‘சம பங்கு’ வேணும்.. அனைவரது மனசையும் கவர்ந்த காரணம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலுங்கு தேசம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இருந்து விடுப்பு வேண்டி விண்ணபித்த காரணம் அனைவரது மனதையும் கவர்ந்து வருகிறது.
தெலுங்கு தேசம் கட்சியின் ஸ்ரீகாகுளம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராம் மோகன் நாயுடு (33). இவர் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலிருந்து 9 நாட்கள் விடுப்பு வேண்டி மக்களவை தலைவர் ஓம் பிர்லாவிடம் கோரிக்கை வைத்துள்ளார். விடுப்புக்காக அவர் வைத்த காரணம்தான் தற்போது கவனம் பெற்று வருகிறது. கர்ப்பமாக உள்ள மனைவியின் பிரசவத்தின்போது தான் அருகில் இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
அதில், ‘பிள்ளை பேற்றில் இருவருக்கும் பங்கிருக்கிறது. குழந்தையை பார்த்துக் கொள்வதிலும் சம பங்கு வேண்டும் என்ற நோக்கில் இந்த விடுப்பை எடுத்துள்ளேன். ஜனவரி 29 முதல் பிப்ரவரி 10 வரை விடுப்பு கேட்டுள்ளேன். இதை நான் சொல்ல காரணம் உள்ளது. அவையில் நல்ல வருகை பதிவு கொண்டவன் நான். அதனால் எனது விடுப்புக்கான காரணம் பதிவில் இருப்பது நல்லது என நினைத்ததால் இதை செய்துள்ளேன்’ என நாடாளுமன்ற உறுப்பினர் ராம் மோகன் நாயுடு கூறியுள்ளார்.
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் தனது மனைவியின் பிரசவத்துக்காக ஆஸ்திரேலிய தொடரில் இருந்து விடுப்பு எடுத்துச் சென்றார். தற்போது நாடாளுமன்ற உறுப்பினரும் அதேபோல் விடுப்பு வேண்டியுள்ளது, இந்தியாவில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ரூல்ஸ் ரூல்ஸ் தான்!'.. அது யாரா இருந்தாலும் சரி!.. ‘கொரோனா’ பாதுகாப்பு விதிமீறலால் ‘ஸ்காட்லாந்து’ பெண் எம்.பிக்கு நேர்ந்த கதி!
- "இரவு விருந்துக்கு செல்லாததால்... நடிகை வித்யா பாலன் பட ஷூட்டிங்கை நிறுத்திய அமைச்சர்???" - பரபரப்பு குற்றச்சாட்டுக்கு ம.பி. அமைச்சர் அதிரடி விளக்கம்!!!
- 'இனிமேல் மதம் மாத்துறதுக்காக...' 'திருமணம் செய்தால் 5 வருஷம் ஜெயில்...' - சட்டம் கொண்டு வரப்போவதாக அறிவித்த மாநிலம்...!
- அப்றம் என்ன இந்த தீபாவளிக்கு செம ‘ஜாலி’ தான்.. பள்ளி மாணவர்களுக்கு ஒரு ‘குட் நியூஸ்’..!
- “வீடு.. உணவின்றி தெருக்களில் தவிச்சோம்!”.. ‘நியூஸிலாந்து’ பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்னின்’ கேபினெட்டில் எம்.பியாக இடம்பெற்ற ‘இந்தியர்’ கௌரவ் ஷர்மா!
- சினிமாவை மிஞ்சிய 'ஹைடெக்' கும்பல்... 'பகீர் சம்பவத்திற்கு பின்னிருந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர்!'... 'அடுத்தடுத்து வெளியான அதிரவைக்கும் தகவல்கள்!!!...
- “32,000 பேருக்கு கூண்டோட நேர்ந்த கதி!”.. விமான நிறுவனங்கள் எடுத்த பரபரப்பு முடிவு!.. ‘இன்னும் என்னலாம் நடக்குமோ!’
- “வசந்த் & கோ” உரிமையாளரும், காங்கிரஸ் எம்.பியுமான ‘வசந்தகுமார்’ கொரோனாவால் காலமானார்!
- VIDEO: கொரோனா வார்டில்.. குடும்பமே சேர்ந்து போட்ட குத்தாட்டம்!.. ‘நடந்தது இதுதான்’!.. வைரல் ஆகும் வீடியோ!
- ‘கொரோனா’ பாதித்த பாலிவுட் ‘பாடகியுடன்’... ‘பார்ட்டியில்’ பங்கேற்ற... அரசியல், ‘சினிமா’ பிரபலங்கள் ‘கலக்கம்’... ‘பரபரப்பு’ சம்பவம்...