நடுரோட்டுல வச்சு 'இப்படி'யாம்மா பண்றது...? இந்த அளவுக்கு 'பிரச்சனை' ஆகும்னு நினைக்கல சார்...! - மாட்டிக்கொண்டு முழிக்கும் இளம்பெண்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்தியப்பிரதேசத்தில் போக்குவரத்து சிக்னல் நடுவில் நடனமாடிய இளம்பெண்ணிற்கு அடுத்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையின் குறுக்கே பெண் ஒருவர் நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகியது.
வைரலாகிய அந்த வீடியோவில் ஆடிய பெண் ஷ்ரேயா கல்ரா (Shreya Kalra) எனவும், அது ரசோமா சதுக்கத்துக்கு அருகே, சாலைகள் சந்திப்புப் பகுதியில் எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.
அந்த வீடியோவில் சிக்னலின் போது சிவப்பு விளக்குப் போட்டதும், வாகனங்கள் நின்றுவிட்ட நிலையில் ஷ்ரேயா கல்ரா கருப்பு நிற உடை அணிந்துக் கொண்டு, தலை மற்றும் முகத்தை மூடியபடி ஓடி வந்து, ஆங்கிலப் பாடலுக்கு நடனமாடினார்.
இந்த நிலையில் தற்போது, ஷ்ரேயா கல்ரா மீது இந்திய தண்டனைச் சட்டம் 290-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.
இதுகுறித்து கூறிய மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா, அப்பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அதன்பின் ஷ்ரேயா கல்ராவைக் கண்டுபிடித்த காவல்துறையினர், அவர் மீது வழக்குப் பதிவு செய்து ரூ.200 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கூறிய ஷ்ரேயா கல்ரா தன் சமூகவலைத்தளத்தில், 'நான் சிவப்பு விளக்குப் போட்டதும் வாகன ஓட்டிகள் நிற்க வேண்டும். அப்போது தான் பாதசாரிகள் சாலையைக் கடக்க முடியும் என்ற விழிப்புணர்வுக்காக தான் இந்த நடன வீடியோவை எடுத்தேன். ஆனால் இந்த வீடியோ இப்படி சர்ச்சையாகும் என்று தெரியவில்லை.' எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்