சன்னி லியோன் வீடியோ.. 3 நாளுல மன்னிப்பு கேட்கணும், இல்லன்னா.. எச்சரித்த அமைச்சர்..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்தியப்பிரதேச மாநிலத்தின் உள்துறை அமைச்சரான நரோத்தம் மிஸ்ரா (Narottam Mishra), நடிகர் சன்னி லியோன் (Sunny Leone) மீது எச்சரிக்கை ஒன்றை அளித்துள்ளார்.

சன்னி லியோன் வீடியோ.. 3 நாளுல மன்னிப்பு கேட்கணும், இல்லன்னா.. எச்சரித்த அமைச்சர்..
Advertising
>
Advertising

கடந்த 22 ஆம் தேதியன்று, பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனின் ஆல்பம் சாங் ஒன்று யூடியூபில் வெளியிடப்பட்டிருந்தது. 'மதுபான் மே ராதிகா' என தொடங்கும் இந்த பாடல், இதுவரை யூடியூப் தளத்தில், சுமார் ஒரு கோடிக்கு மேல் பார்வையாளர்களைக் கடந்து அதிகம் வைரலாகி வருகிறது.

கடந்த 1960 ஆம் ஆண்டு 'கோஹினூர்' என்னும் திரைப்படத்தில் வரும் 'மதுபான் மே ராதிகா' என்ற பாடலை முகமது ரஃபி என்பவர் பாடியிருந்தார். இந்த பாடலின் முதல் வரியை மட்டும் எடுத்துக் கொண்டு, தற்போது ரீமிக்ஸ் செய்யப்பட்டு, சன்னி லியோன் நடனத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலில் சன்னி லியோன் மிகவும் ஆபாசமாக ஆடுவதாகவும், அதே போல பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், பல இந்து மதத்தைச் சேர்ந்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

புண்படுத்தும் நோக்கு

இந்த பாடலை, உடனே யூடியூப் தளத்தில் இருந்து நீக்கவும் இவர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில், மத்தியப்பிரதேச அமைச்சர் நரோத்தம் மிஸ்ராவும் இந்த பாடலுக்கு தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார். 'சில விஷக் கிருமிகள் தொடர்ந்து இந்து மத உணர்வினை புண்படுத்தி வருகின்றனர். அதே போல, இந்த 'மதுபான் மே ராதிகா நாச்சே' என்ற பாடலும் எங்களின் உணர்வினை புண்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. சன்னி லியோன், பாடகர்கள் ஷாரிப் மற்றும் டோஷி ஆகியோரை நான் கடுமையாக எச்சரிக்கிறேன். எங்களது உணர்வுகளை அவர்கள் புரிந்து கொண்டு, பாடலை நீக்கி, மூன்று நாட்களுக்குள் எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுப்போம்' என பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

மன்னிப்பு கேட்காவிட்டால் நடவடிக்கை

இந்த பாடலுக்கு ஏற்கனவே, விருந்தாபன் நிறுவனத்தைச் சேர்ந்த சாந்த் நாவல் கிரி மகராஜ், சன்னி லியோனுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்து, இந்த பாடலை நீக்கவில்லை என்றால் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம்' என்று தெரிவித்திருந்தார். மேலும், மதுரா பகுதியை சேர்ந்த சாமியார்கள் சிலரும் இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நரோத்தம் மிஸ்ரா

மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, இதற்கு முன்பே இப்படிப்பட்ட எதிர்ப்புகளை பலமுறை தெரிவித்துள்ளார். 'கர்வா சவுத்' விழாவைக் கொண்டாடும் ஓரின சேர்க்கை தொடர்பான, டாபர் நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றின் மீது நரோத்தம் மிஸ்ரா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதன் பிறகு, அந்த விளம்பரம் நீக்கப்பட்டிருந்தது. மேலும், ஆடை வடிவைமைப்பாளரான சபியாசாச்சி முகர்ஜி கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்ட 'மங்கல் சூத்ரா' விளம்பரம், ஆபாசமாக இருப்பதாக நரோத்தம் மிஸ்ரா எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து, அந்த விளம்பரமும் நீக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

SUNNY LEONE, NAROTTAM MISHRA, MADHUBAN, மதுபான், நரோத்தம் மிஸ்ரா, சன்னி லியோன், எதிர்ப்பு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்