பிரிந்து சென்ற மனைவியை சமாதானப்படுத்த வாட்டர் டேங்கில் ஏறிய கணவன்.. மத்திய பிரதேசத்தில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்திய பிரதேச மாநிலத்தில் தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவியை சமாதானப்படுத்துவதற்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி கணவர் போராடி இருக்கிறார். இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
>
Advertising

                         Images are subject to © copyright to their respective owners.

Also Read | "233 ஆவது தோல்வி".. வாக்களிச்ச 6 பேருக்கும் நன்றி, மகிழ்ச்சியா இருக்கு.. தேர்தல் மன்னன் பத்மராஜனின் அதிரடி ஸ்பீச்!!

வாக்குவாதம்

மத்திய பிரதேச மாநிலத்தின் குணா மாவட்டத்தில் உள்ள புரன்பூரா பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக் ராய். 26 வயதான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா பரிஹார் எனும் இளம் பெண்ணிற்கும் சில வருடங்களுக்கு முன்பு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்று இருக்கிறது. இதனை அடுத்து இருவரும் புரன்பூரா பகுதியில் ஒன்றாக வசித்து வந்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் சமீபத்தில் அபிஷேக் மற்றும் அவரது மனைவி கிருஷ்ணா ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. வாக்குவாதம் கைமீறி சென்று இருக்கிறது. இதனால் கோபமடைந்த கிருஷ்ணா தனது கணவரின் வீட்டிலிருந்து வெளியேறி தனது பெற்றோர்கள் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

வாட்டர் டேங்க்

இதனால் மனம் வருந்திய அபிஷேக் ராய் தனது மனைவியின் பெற்றோர் வீட்டிற்கு சென்று இது குறித்து பேசியுள்ளார். அப்போது தன்னுடன் வந்து வாழும்படி அபிஷேக் தெரிவித்திருக்கிறார். ஆனால் அவருடைய மனைவி கிருஷ்ணா பரிஹார் அவருடன் செல்ல விருப்பமில்லை என தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அபிஷேக் ராய் அங்கிருந்து வெளியேறி அருகில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் ஏறி இருக்கிறார்.

அப்போது தனது மனைவி தன்னுடன் வந்து வசிக்காவிட்டால் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து கீழே குதித்துவிடுவதாக கூச்சலிட்டு இருக்கிறார் அபிஷேக் ராய். இதனால் அந்த பகுதியே அரண்டு போனது. அங்கிருந்த பொதுமக்கள் வாட்டர் டேங்கிற்கு அருகில் கூடி அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்துள்ளனர்.

Images are subject to © copyright to their respective owners.

சமாதானம்

இதுகுறித்து காவல்துறைக்கும் அபிஷேக் ராயின் மனைவி கிருஷ்ணாவிற்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக விரைந்து வந்த கிருஷ்ணா தனது கணவரை சமாதானப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். இதற்கு மத்தியில் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்திருக்கின்றனர். அவர்களும் கீழே இறங்கி வருமாறு வேண்டுகோள் வைத்திருக்கின்றனர். இதனை நம்ப மறுத்து தான் கீழே குறிக்க இருப்பதாக பயமுறுத்தி இருக்கிறார் அபிஷேக்.

அறிவுரை

இதனைத் தொடர்ந்து சேர்ந்து வாழ விருப்பப்படுவதாக மனைவி தெரிவித்துள்ளார். இதனை கேட்ட அபிஷேக் வாட்டர் டேங்கிலிருந்து கீழே இறங்கி இருக்கிறார். இந்த சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே வாட்டர் டேங்கில் ஏறிய போலீஸ் அதிகாரிகள் அவரை கயிறு மூலம் கட்டி கீழே அழைத்து வந்திருக்கின்றனர். இடையில் மனம் மாறி ஏதாவது விபரீத காரியத்தில் அவர் ஈடுபட்டு விடுவாரோ என்ற அச்சத்தில் அவரை கயிறால் கட்டி கீழே அழைத்து வந்ததாக காவல்துறையில் தெரிவித்திருக்கின்றனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் இருவருக்கும் அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read | "நீட் தேர்வை ஒழிக்கணும், அது வரைக்கும் ஓயமாட்டேன்".. முதல்வர் மு.க. ஸ்டாலின் லட்சியம் இது தான்.. Exclusive!!

MADHYA PRADESH, MAN, WATER TANK, WIFE, HOME

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்