இந்த வெயிலை சமாளிக்க இதுதான் ஒரே வழி.. வேறலெவலில் யோசிச்ச கல்யாண வீடு.. சிறப்பான சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், கல்யாண வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read | 4 மணிநேரம் லேட்டா வந்த மாப்பிள்ளை.. உடனே மணப்பெண்ணின் ‘அப்பா’ செஞ்ச காரியம்.. அதிர்ந்துபோன கல்யாண வீடு..!
இந்தியாவில் இந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. மார்ச், ஏப்ரல் மாதத்தில் பல இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் மற்றும் அதனை தாண்டி பதிவாகியுள்ளது. அதனால் மக்கள் பலரும் பகலில் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர்.
தமிழகத்திலும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக தென் மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்தது. அதனால் அப்பகுதிகளில் வெப்பம் தணிந்து சற்று குளிர்ந்த சூழல் நிலவியது. வெயிலின் தாக்கம் காரணமாக பலரும் பகல் நேரங்களில் விழாக்கள் வைப்பதை தவிர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், திருமண விழாவில் நகரும் பந்தலுடன் சென்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை தேவயானி கோஹ்லி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ‘இதனால் தான் இந்தியா கண்டுபிடிப்புகளின் பூமி என்று அழைக்கப்படுகிறது. எளிமையான ஜூகாத், வெயிலின் கொடுமையை தணிக்க இந்தியர்கள் ஒரு வழிகண்டுபிடித்து விட்டார்கள்’ என குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஆட்டம் பாட்டத்துடன் நகரும் பந்தல் அமைத்து மணமகனை அழைத்து செல்கின்றனர். இது எங்கு நடைபெற்றது என்ற தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்