கப்..சிப்..னு கல்யாணம் செய்துகொள்ளப்போகும் பிரபல நடிகை..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கிட்டத்தட்ட ராணுவ கட்டுப்பாடுகளுடன் சமீபத்தில் நடந்து முடிந்தது கேத்தரீனா கைஃப் - விக்கி கவுஷல் திருமணம். இதே ஸ்டைலில் பாலிவுட் நடிகை மௌனி ராய்க்கும் கல்யாணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் ஜனவரி 17 ஆம் தேதி தனது காதலர் சூரஜ் நம்பியாரின் கரங்களை பற்ற இருக்கிறாராம் இந்தக் கவர்ச்சிப் புயல்.

கப்..சிப்..னு கல்யாணம் செய்துகொள்ளப்போகும் பிரபல நடிகை..!
Advertising
>
Advertising

மௌனி ராய்

கடந்த 2007 ஆம் ஆண்டு விளம்பர மாடலாக வெளிச்சத்திற்கு வந்த மௌனி ராய் அதன்பின்னர் 2011 ஆம் ஆண்டு வெளியான பஞ்சாபி மொழிப்படமான ஹீரோ ஹிட்லர் இன் லவ் படத்தில் கதாநாயகியாக கால் பதித்தார். ஆனாலும் இன்றும் மௌனி ராய்க்கு பெரும்பாலான ரசிகர்களை உருவாக்கியது நாகினி என்னும் சின்னத்திரைத் தொடர்தான். மாடல், சின்னத்திரை, வெள்ளித்திரை எனப் பயணித்துவரும் மௌனி ராயும் பிரபல தொழிலதிபருமான சூரஜ் நம்பியாரும் காதலித்து வந்தனர்.

Mouni Roy to tie the knot with Suraj Nambiar on January 27

இந்நிலையில் வரும் ஜனவரி 17 ஆம் தேதி இவர்களின் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லிப்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சில்மிஷம்... 10 நொடியில் ஆட்டத்தை முடித்த சிறுமி

துபாய்

தனது காதலரை சந்திக்க அடிக்கடி மௌனி ராய் துபாய்க்கு பறப்பது வழக்கம் தான். ஆகவே துபாயில் இவர்களது திருமணம் நடைபெறும் என பாலிவுட்டில் பேசப்பட்டுவந்தது. ஆனால், இப்பொது மௌனி ராய் - சூரஜ் நம்பியார் திருமணம் கோவாவில் நடைபெற இருப்பதாக தகவல் கிடைத்துள்ளன.

கப்..சிப் கல்யாணம்

மௌனி ராய் - சூரஜ் நம்பியார் திருமணத்திற்காக கோவாவில் உள்ள பிரபல 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்று முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து வெளியே வாய் திறக்க வேண்டாம் என பாலிவுட் முன்னணி நடிகர், நடிகைகளுக்கு இந்த ஜோடி அன்புக்கட்டளை இட்டிருப்பதாகவும் தெரிகிறது.

கோவாவின் வேகட்டார் (Vagator) பீச்சில் அமைந்துள்ள W -வில் தான் இவர்களது திருமணம் நடைபெற இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் தன் நண்பர்களோடு இதே ஹோட்டலில் மௌனி ராய் தங்கியிருந்தது ஞாபகமிருக்கலாம்.

டாக்டர் செய்த ஒற்றை தவறு.. 15 வருசம் கண்பார்வை இல்லாமல் தவித்த பெண்! கடைசியில் தெரியவந்த உண்மை!

திருமண அழைப்பு 

தற்போதைய நிலையில் கரண் ஜோஹர், ஏக்தா கபூர், மனிஷ் மல்ஹோத்ரா, ஆஷிகா கொரோடியா  ஆகியோருக்கு இந்தக் கல்யாணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. மௌனி ராயின் காதலர் சூரஜ் நம்பியார் தற்போது இந்தியாவில் இருந்தாலும் மௌனி ராய் மட்டும் திருமண வேலைகளில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறாராம்.

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்

இந்தத் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் பிரபலங்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழோடு வரும்படி அட்வைஸ் கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்டுவந்த மௌனி ராய் -சூரஜ் நம்பியார் திருமணம் எப்போது என்ற கேள்விக்கு இறுதியில் மவுனம் கலைத்திருக்கிறார் மௌனி ராய்..

MOUNI ROY, KNOT, SURAJ NAMBIAR, NAGINI SERIAL, கல்யாணம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்