'என்னோட குழந்தைக்கு இப்படியா'?... பிறந்த 'பச்சிளம் குழந்தையை'... கண்டு 'அதிர்ந்த தாய்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குழந்தை பிறப்பு என்பது நிச்சயம் ஒரு தாய்க்கு மறுபிறவி தான்.அவ்வாறு ஒவ்வொரு குழந்தை பிறக்கும் போதும் குடும்பத்தில் நிலவும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. அந்த வகையில் பெங்களூருவில் பிறந்த குழந்தையை கண்டு மகிழ்ச்சியில் இருந்த குடும்பத்தினருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

பெங்களூரு பகுதியில் வசித்து வரும் பிரதீப் குமார்,சந்திரிகா தம்பதியருக்கு கடந்த மாதம் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது.குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் இருந்த அனைவரும் குழந்தையை கொஞ்சி கொண்டிருந்தார்கள்.மறுநாள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்காக சந்திரிகா குழந்தையை எடுத்த போது,குழந்தையின் வாயில் பற்கள் இருப்பதை கண்டு அதிர்ந்து போனார்.

உடனே மருத்துவரை நாடிய தம்பதியர்,குழந்தைக்கு எவ்வாறு பற்கள் இருக்கிறது என ஆச்சரியத்துடன் கேட்டுள்ளார்கள்.அதற்கு மருத்துவர்கள் 'இது போன்ற நிகழ்வுகள் நடப்பது மிகவும் அரிதான ஒன்று' என தெரிவித்தார்கள்.இந்நிலையில் குழந்தையின் பற்கள் ஆடிக்கொண்டிருந்தன.இதனால் பற்கள் தனாக விழுந்தால் குழந்தை விழுங்கி விடும் என,குழந்தையின் பெற்றோர்கள் அச்சப்பட்டார்கள்.ஆனால் மருத்துவர்கள் அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை,பற்களை அறுவை சிகிச்சை மூலம் நீக்கி விடலாம் என தெரிவித்தார்கள்.

இதையடுத்து கடந்த 8ம் தேதி நடந்த அறுவை சிகிச்சையில் குழந்தையின் பற்கள் அகற்றப்பட்டது.இதுகுறித்து பேசிய மருத்துவர்கள் 'குழந்தையின் பற்களால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை.அது சாதாரண பற்கள் தான்.ஆனால் குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது அம்மாவுக்கு தொந்தரவாக இருக்கும் என்பதால் நீக்கினோம்' என தெரிவித்தார்கள்.

BENGALURU, FLASHING TWO TEETH, NEW BORN BABY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்