'குழந்தைகளுக்கு கொரோனா'... "அவங்க கூட இருந்தே பாத்துக்கணும்னு முடிவு பண்ணேன்"... கொரோனாவை வென்ற தாயின் பாசப் போராட்டம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்த இர்பான் மஸ்ரத் என்பவருக்கு இரண்டு பெண் குழந்தைகள். இர்பான் மஸ்ரத்தின் மாமனார் கடந்த மாதம் துபாயில் இருந்து திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் தாத்தாவுடன் நெருங்கி இருந்த நிலையில் இரண்டு சிறுமிகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது.

குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அறிந்ததும் பதறிப் போன தாயார் இர்பான் மஸ்ரத் தனது குழந்தைகளுடன் கொரோனா வார்டில் தங்க முடிவு செய்தார். குழந்தைகள் பத்து வயதுக்கு கீழே என்பதால் உடனிருக்க மருத்துவர்களும் அனுமதி கொடுத்தனர். குழந்தைகளுக்கு மனதளவில் குழப்பங்கள் நேரக்கூடாது என்பதற்காக தனக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக குழந்தைகளை நம்ப வைத்து அவர்களுடனே இருந்துள்ளார் இர்பான் மஸ்ரத்.

இரண்டு வாரங்களுக்கு மேல் குழந்தைகளுடன் மருத்துவமனையில் இருந்து அவர்களை நல்லபடியாக கவனித்துள்ளார். பின்பு மகள்கள் இருவரும் குணமடைந்த நிலையில் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். குழந்தைகளுடன் இருந்ததால் தாய்க்கும் தொற்றுள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது. நெகட்டிவ் என உறுதியான பின் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

இதுகுறித்து இர்பான் மஸ்ரத் கூறுகையில், 'எனது குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான போது நான் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டேன். அதனால் உடனிருந்து அவர்களை கவனிக்க முடிவு செய்தேன். இது என் வாழ்வில் மிகவும் அதிர்ச்சிகரமான சம்பவம்' என குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்