'மருமகனின் அண்ணனை மணந்த மாமியார்!'.. 'கள்ளக்காதலுக்காக விவாகரத்து செய்யப்பட்ட கணவர்!'.. அதிர்ச்சியளிக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபஞ்சாபின் குர்தாஸ்புரில் நடந்துள்ள விநோதமான திருமண சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாபில் 37 வயதான பெண்மணி ஒருவர், தனது 18 வயது மகளை 21 வயதான ஒருவருக்கு அண்மையில் மணம் முடித்து தந்திருக்கிறார். அந்த இளம் ஜோடிகள் இப்போதுதான் தங்கள் வாழ்க்கையை வாழத் தொடங்கிய நிலையில், அந்த பெண்ணின் அம்மா செய்துள்ள காரியத்தால் பெரும் அதிர்வு ஏற்பட்டுள்ளது.
ஆம், அந்த பெண்ணின் அம்மா, தனது மகளின் கணவருக்கு அண்ணனான 22 வயது நபரை, தனது வாழ்க்கைத் துணைவராக தேர்ந்தெடுத்திருப்பதுதான் அந்த சம்பவம். அதோடு அந்த பெண்மணி, மருமகனின் அண்ணன் மீது காதலில் விழுந்ததால் தன் கணவரையே விவாகரத்து செய்துவிட்டு, தன்னை விட 15 வயது சிறுவயதுடைய மருமகனின் அண்ணனை திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆனால் இவர்களின் காதல் விவகாரம் அப்பெண்மணியின் மகளுக்கு தெரியாமல் இருந்துள்ளது.
இதனால் மொத்த குடும்பமும் இவர்கள் இருவரையும் எதிர்க்க, தங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென இருவரும் நீதித்துறையை அணுகியுள்ளனர். இந்த வழக்கு வரும் அக்டோபர் 31-ஆம் தேதி விசாரிக்கப்படவுள்ளது. அண்ணன், தம்பி இருவரையும் முறையே அம்மா, மகள் திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் கல்ஃப் செய்தி இதழில் வெளியானதை அடுத்து பெரும் சலனத்தை உண்டுபண்ணியுள்ளது.
மற்ற செய்திகள்
பிறந்தநாள் பார்ட்டி.. வகுப்பறைக்கு 'பீர்' பாட்டில்களுடன் வந்த மாணவி..ஆசிரியர் 'திட்டியதால்' தற்கொலை!
தொடர்புடைய செய்திகள்
- 'புதுப்பெண்ணுடன் தினமும் போனில் பேசி, இருவருக்கும் தேனிலவு நடக்காம பாத்துக்கிட்டார்!'.. 100 பெண்களை மயக்கிய போலி சமூக தொண்டர்!
- 'நடந்த உண்மை இதாங்க!'.. சிசிடிவியில் வெளியான தடாலடி சம்பவத்தின் இன்னொரு பக்கம்!
- 'நம்பிக்கை இல்லனா கார்ல போய் பாருங்க'.. 'மீதி பேர் சடலம்லாம் வீட்ல இருக்கு'.. போலீஸ் ஸ்டேஷனை மிரளவைத்த 'கொலையாளி!'!
- 'உங்க மேல கம்ப்ளெய்ண்ட் வந்துருக்கு.. கொஞ்சம் வர்றீங்களா?'... போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வந்த போன்.. இளைஞர் எடுத்த விபரீத முடிவு!
- 'திமுதிமுவென வீடு புகுந்த கும்பல்'.. 'திரைப்பட பாணியில் காதல் தம்பதியருக்கு'.. 'நள்ளிரவில் நடந்த பயங்கரம்!'
- 'ட்ரான்ஸ்ஃபர் ஆனதும் மறந்துட்டாரு.. நீங்கதான் உதவணும்'.. இளம் பெண்ணுக்காக கலெக்டர் செய்த காரியம்!
- 'குத்துயிரும் குலையுயுருமாய் கர்ப்பிணி பெண்'.. பேஸ்புக் காதலனின் முடிவு.. பதறவைத்த சோக சம்பவம்!
- '4 மாச பேஸ்புக் நண்பர்கள்'.. எதேச்சையான முதல் சந்திப்பு.. '4 மணி நேரத்தில் நடந்த சுவாரஸ்யம்'!
- 'நாங்க 5 பேர்.. எங்களுக்கு பயம்னா என்னனு தெரியாது'.. பாம்புகளுடன் கர்பா டான்ஸ் ஆடிய இளம் பெண்கள் கைது!
- 'கல்யாணம்' ஆகலேன்னா 'தயவுசெஞ்சு' இத படிக்காதீங்க.. 'செம' காதல்.. 73 வயது 'தாத்தா'வை மணக்கும் இளம்பெண்!