தன்னோட குழந்தைக்காக அம்மா என்னவேனா செய்வாங்க.. பிரபல தொழிலதிபர் பகிர்ந்த நெஞ்சை உருகவைக்கும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய பணக்காரர்களுள் ஒருவரும் தொழிலதிபருமான ஹர்ஷ் வர்தன் கோயங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
பொதுவாக தங்களது குழந்தைகளின் வாழ்க்கைக்காக எதையும் செய்ய துணிந்தவர்கள் தாய்மார்கள். பிள்ளைகளின் வசதிக்காக பெரும் சிக்கலையும் சமாளிக்கும் மனவலிமை எப்படியோ அவர்களுக்கு கிடைத்துவிடுகிறது. இந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஹர்ஷ் கோயங்கா அப்படியான அம்மா ஒருவருடைய வித்தியாசமான அதே நேரத்தில் நெகிழ வைக்கும் முயற்சியை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஹர்ஷ் வர்தன் கோயங்கா
இந்திய பணக்காரர்களுள் ஒருவரும் RPG குழுமத்தின் தலைவருமான ஹர்ஷ் வர்தன் கோயங்கா ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட அறிக்கையின் படி இவருடைய சொத்து மதிப்பு 2.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அதன் அடிப்படையில் கோயங்கா இந்திய பணக்காரர்களின் பட்டியலில் 85 வது இடத்திலும் உலக பணக்காரர்களின் பட்டியலில் 1445 ஆவது இடத்திலும் உள்ளார். 1957 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்த கோயங்கா, அங்கேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பையும் முடித்திருக்கிறார். கொல்கத்தாவின் செயின்ட் சேவியர் கல்லூரியில் பொருளாதாரம் படித்த கோயங்கா அதைத் தொடர்ந்து, ஸ்விட்சர்லாந்தில் MBA படித்திருக்கிறார்.
வீடியோ
ஹர்ஷ் கோயங்கா பகிர்ந்துள்ள இந்த வீடியோவில் ஒரு பெண்மணி தனது குழந்தைக்காக சைக்கிளின் பின்புறத்தில் சிறிய பிளாஸ்டிக் சேர் ஒன்றை பொருத்தியுள்ளார். அதில் அவரது குழந்தை சவுகரியமாக அமர்ந்திருக்க, அந்த பெண்மணி சைக்கிளை ஒட்டிச் செல்கிறார். இதனை சக பயணி ஒருவர் வீடியோ எடுத்திருப்பது போல தெரிகிறது. இந்நிலையில் இந்த வீடியோவை கோயங்கா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். மேலும் அந்த பதிவில்,"குழந்தைக்காக தாய் எதைத்தான் செய்ய மாட்டார்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த வீடியோ இதுவரையில் 1.4 மில்லியன் முறை பார்க்கப்பட்டிருக்கிறது. மேலும், நெட்டிசன்கள் அந்த பெண்மணியின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தும் வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மகனின் கருவை சுமக்கும் தாய்.. இப்படி ஒரு முடிவுக்கு என்ன காரணம்.? நெகிழ்ச்சி பின்னணி..!!
- மனைவியுடன் மார்க் ஸக்கர்பெர்க் வெளியிட்ட அறிவிப்பு.. வாழ்த்து மழை பொழியும் நெட்டிசன்கள்..!
- நைட்ல காதலியை பார்க்கப்போன இளைஞர்.. மறைஞ்சு நின்ன இளம்பெண்ணின் அம்மா.. கொஞ்ச நேரத்துல கேட்ட அலறல் சத்தம்..!
- "எப்படி நடந்துச்சு'ன்னு இன்னும் கண்டுபிடிக்க முடியல".. திறக்கப்படாத வீட்டுக்குள் இருந்த தாய், மகன்.. பல மாசமா தொடரும் மர்மம்!!..
- "5 வயசுல இப்படி ஒரு திறமையா.?".. சின்ன பையனை மெய்மறந்து பாராட்டிய பிரபல தொழிலதிபர்.!!
- அம்மா மாதிரி இருக்கு.. கோவையில் பஸ் பின்னாடியே ஓடுன குட்டிக்குதிரை.. கண்கலங்க வெச்ச சம்பவம்..
- Video : விமானத்தில் ஏறிய சிறுவன்.. மறுகணமே கட்டியணைத்து கொண்ட விமான பணிப்பெண்.. சுவாரஸ்ய பின்னணி!!
- "அது வெறும் நகரம் மட்டும் இல்ல, ஒரு உணர்வு".. சொந்த ஊர் குறித்து தொழிலதிபர் போட்ட பதிவு.. உருகும் நெட்டிசன்கள்..!
- "சாகுறதுக்கு முன்னாடி ஒருதடவை அவனை பார்த்துடனும்னு நெனச்சேன்".. ஒன்றரை வயதில் பிரிந்துபோன மகன்.. 25 வருஷத்துக்கு அப்பறம் நடந்த அதிசயம்..!
- மாத்திரை அட்டையில் மணமக்கள் பெயர்.. வினோத திருமண பத்திரிகையை பார்த்து வியந்துபோன தொழிலதிபர்.. அந்த Caption தான் செம்ம.!