‘மெத்தைக்கு அடியில் வீசிய துர்நாற்றம்’.. ‘சடலமாக கிடந்த குழந்தை’.. மாயமான மனைவி மீது கணவன் பரபரப்பு புகார்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுழந்தையை கொலை செய்துவிட்டு காதலனுடன் மனைவி சென்றுவிட்டதாக கணவர் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகர் மாநிலம் புரெயில் கிராமத்தை சேர்ந்தவர் தஷ்ரத் குமார். எலெக்ட்ரீசியனாக வேலை பார்க்கும் இவருக்கு, ரூபா என்பவருடன் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு 2 வயதில் ஆண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 25ம் தேதி வேலை முடிந்து தஷ்ரத் குமார் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டில் மனைவி மற்றும் குழந்தை இல்லை. இதனால் பல இடங்களில் தேடி பார்த்துள்ளார். இந்த நிலையில் இரண்டு நாள்கள் கழித்து படுக்கையறையில் உள்ள கட்டில் மெத்தைக்கு அடியில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் உடனே மெத்தையை தூக்கிப் பார்த்துள்ளார். அப்போது தனது குழந்தை வாயில் துணியால் கட்டப்பட்டு சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனை அடுத்து காவல் நிலையம் சென்ற தர்ஷத், குழந்தையை கொலை செய்துவிட்டு காதலனுடன் மனைவி தலைமறைவாகிவிட்டதாக புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். முன்னதாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கணவருடன் ரூபா விருப்பமில்லாமல் வாழ்ந்ததாகவும், கடந்த 2019-ம் ஆண்டு இந்த தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்ததும் தெரியவந்துள்ளது.
News Credits: Hindustan Times, OutlookIndia
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வீட்டுக்கு வந்த தோழியால் நடந்த விபரீதம்'... 'ஆத்திரத்தில் மனைவி கூறியதை'... 'அப்டியே செய்த கணவனால்'... 'பரிதவிக்கும் குழந்தைகள்'!
- "காவலர் சீருடையில் வந்து"... "தரதரவென்று இழுத்துப் போய்"... "ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்களுக்கு நடந்த கொடூரம்"...
- ‘திருடுன பைக்கை பார்ட்பார்டா பிரிச்சு விற்பனை’.. ‘ஒன்னு இல்ல ரெண்டு இல்ல 100-க்கும் மேல’.. சென்னையை அதிரவைத்த கொள்ளையர்கள்..!
- ‘வேலை கிடைக்காத விரக்தி’.. ‘ஒரு மாசமா யூடியூப் பாத்து செஞ்ச வெடிகுண்டு’.. கைதான இன்ஜினீயரின் பரபரப்பு வாக்குமூலம்..!
- “கணவரைக் காணும்ங்க!”.. “புகார் அளிக்க வந்த பெண்ணுடன் தலைமைக் காவலர் செய்த காரியம்!”.. “கையும் களவுமாக பிடித்த கணவரின் அண்ணன்!”
- “என்ன ஒரு ஆனந்தம்!”.. “பைக் ஓட்டும்போது செய்ற வேலையா இது?”.. வைரல் வீடியோ!
- 'பள்ளி வாகனம் ஏறி'... 'உடல் நசுங்கி'... '3 வயது குழந்தைக்கு நடந்த பரிதாபம்!'...
- 'சபரி மலைக்கு சென்றுவிட்டு திரும்பிய தம்பியால்'... 'அக்காவுக்கு நேர்ந்த பயங்கரம்'... 'சென்னையில் நடந்த பரிதாபம்'!
- VIDEO: முதியோர் இல்லத்தில் சங்கிலியால் கட்டிவைத்து கொடுமை.. அதிர்ச்சி வீடியோ..!
- VIDEO: ‘தாயை கழிவறையில் தங்கவைத்த வளர்ப்பு மகன்’.. ‘கடுங்குளிரில்’ சுருண்டு கிடந்த கொடுமை..!