வேலைக்கு போக முடியுமா...? முடியாதா...? 'மாமியாரும், மனைவியும் சேர்ந்து கொடூரமாக...' நெஞ்சை பதற வைக்கும் கொடூர சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்திய பிரதேச மாநிலத்தில் ஊரடங்கால் வேலை இழந்த கணவனை வேலை தேட சொல்லி மாமியாரும் மனைவியும் அடித்தே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
Advertising

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவிய காரணத்தால் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் பொது ஊரடங்கு பல்வேறு நெறிமுறைகளுடன், தளர்வுகளுடனும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்  அன்றாடம் பணி செய்யும் தொழிலாளிகளும், சிறு குறு வியாபாரிகளும்  தான் பெரும் சிரமத்தில் சிக்கியுள்ளனர் எனலாம். மேலும் பெரிய நிறுவனம் முதல் சிறிய நிறுவனம் வரை பலர் தங்களின் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வேலையிழந்த கணவனை வேலை தேடி சொல்லி மனைவியும் அவரது மாமியாரும் அடித்து கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் கார்கலா கிராமத்தை சேர்ந்த ரமேஷ்(38) கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையிழந்துள்ளார். இந்நிலையில் அவரது மனைவி லீலா தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் வேலை தேடி செல்லுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். சில நாட்கள் இது சண்டையாகவும் மாறியுள்ளது.

ஆனால் ரமேஷ் தன்னால் தற்போது எந்த வேலையும் தேட முடியாது என கூறியதால் கணவன், மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் கைகலப்பில் முடிந்ததில் மனைவி லீலாவும் அவரது அம்மாவும் ஒன்றாக சேர்ந்து ரமேஷை தாக்கியுள்ளனர்.

பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த ரமேஷை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே ரமேஷ் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரமேஷின் மனைவி மற்றும் மாமியார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்