'நெஞ்சோடு அணைத்தப்படி'... 'நிலச்சரிவின் கோரப்பிடியில்'... 'உருக வைக்கும் சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில், தனது ஒன்றரை வயது மகனை நெஞ்சோடு அணைத்தப்படி தாய் ஒருவர், உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் கடந்த சில நாள்களாக தென் மேற்கு பருவ மழை அதிகளவில் பெய்து வருகிறது. இதனால் அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை சுமார் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணவில்லை என்று கூறப்படுகிறது.  இந்நிலையில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்புப்படையினர் மீட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று மதியம், மலப்புரம் அருகே உள்ள கொட்டகண்ணு , சாத்தகுளம் ஆகிய பகுதியில்  நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தனது ஒன்றரை வயது மகனுடன், கீது என்ற 21 வயது இளம்பெண் காணாமல் போனார். அவர் உட்பட பலரைத் தேடும்பணி நடைபெற்றது.

அப்போது மீட்புப் படையினர் கண்ட ஒரு காட்சி பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நிலச்சரிவில் காணாமல் போன கீது, தனது ஒன்றரை வயது மகன் துருவ்வை நெஞ்சோடு அணைத்தவாறு நிலச்சரிவில் சிக்கி இறந்து உள்ளார். இதைப்பார்த்த மீட்புப்படையினர் மற்றும் அருகில் இருந்தவர்கள் கண்கலங்கினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கண்ட, அவர்களின் உடலை பத்திரமாக மீட்புப்படையினர் மீட்டனர். கீதுவின் கணவர் சரத்தும், அந்த நிலச்சரிவின் போது அவர்களுடன் தான் இருந்து உள்ளார். ஆனால் சரத் மட்டும் அதிஷ்டவசமாக உயிர் தப்பித்து உள்ளார். இதேபோல் சரத்தின் தாயாரின் உடல் இன்று மீட்கப்பட்டது.

சரத்தும் கீத்துவும் இரண்டு வருடங்களுக்கு முன்பு காதலித்துவந்துள்ளனர். காதலுக்கு கீத்துவின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்காததால் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் குழந்தை பிறந்துள்ளது. துருவ் பிறந்தபிறகு குடும்பத்தினரின் கோபம் தணிந்துள்ளது. இதனால் இருவரையும் மீண்டும் தங்கள் வீட்டுக்கு அழைக்க திட்டமிட்டுள்ளனர் கீத்துவின் குடும்பத்தினர்.

ஆனால் அதற்குள் இப்படி ஒரு சோகம் நிகழ சம்பவ இடத்துக்கு ஓடியுள்ளனர் கீத்துவின் பெற்றோர். தன்குழந்தையை மார்பில் அணைத்தபடி உயிரிழந்ததை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர். `தங்கள் மகள் மீது அதிகமான பாசம் வைத்திருந்தோம். அதனால்தான் அவள் காதல் திருமணம் செய்ததை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் குழந்தை பிறந்தது எனத் தெரிந்ததும் அவர்களை வீட்டுக்கு அழைக்க முடிவு செய்திருந்தனர். கடைசியில் கீத்துவை அவர்களால் சடலமாகத்தான் பார்க்க முடிந்ததாக‘ கண்ணீருடன் கூறியுள்ளனர்.

KERALA, FLOOD, SON, MOTHER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்