’மகனின் சிகிச்சைக்காக ஒட்டகப்பால்...’ அழுத தாயின் வேண்டுகோளை ஏற்று... 'மாநிலம்' கடந்து உதவி செய்த "ஐபிஎஸ்" அதிகாரி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மும்பையை சேர்ந்த நேகா குமாரி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியை டேக் செய்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், 'எனது மூன்றரை வயது மகனுக்கு ஆட்டிசம் பாதிப்புள்ளது. ஒட்டகப்பால் இருந்தால் அவனது உடல்நிலை சீராக இருக்கும். ஆனால் தற்போது ஊரடங்கின் காரணமாக ஒட்டகப்பால் கிடைக்கவில்லை. ஆகவே, ராஜஸ்தானில் இருந்து ஒட்டக பால் அல்லது பால் பவுடரோ கிடைக்க உதவி செய்ய வேண்டும்' என பதிவிட்டிருந்தார்.

பலபேர் இந்த பதிவை பகிர்ந்ததால் ஐ.ஏ.எஸ் அதிகாரி அருண் போத்ராவின் கவனத்திற்கு நேகா குமாரியின் ட்வீட் செல்ல ராஜஸ்தானிலுள்ள ஒட்டகப்பால் நிறுவனத்தை தொடர்பு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்தார். ஆனால் ராஜஸ்தானில் இருந்து மும்பைக்கு கொண்டு சேர்ப்பது எப்படி என ஆலோசிக்கையில், ரெயில்வேயின் உதவியால் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

சரக்கு ரெயில்கள் உதவியுடன் மூலம் ராஜஸ்தானிலிருந்து மும்பையிலுள்ள நேகா குமரிக்கு சுமார் இருபது லிட்டர் ஒட்டகப்பால் மற்றும் இருபது கிலோ ஒட்டக பால் பொடி கிடைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இறுதியில் மும்பை வந்தடைந்தது. இதனை உறுதிப்படுத்தி ஐ.ஏ.எஸ் அதிகாரி அருண் போத்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அதிகாரி, பெண்ணிற்கு வேண்டுகோளை ஏற்று உதவி செயஹவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்