"அந்த உரிமை பெத்த அம்மாவுக்கு மட்டும் தான் உண்டு".. பரபரப்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குழந்தையின் குடும்ப பெயரை தீர்மானிக்கும் உரிமை தாய்க்கு மட்டுமே உள்ளதாக இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ராஜபக்சே சகோதரர்கள் நாட்டை விட்டு வெளியேற தடை.. உச்ச நீதிமன்றம் அதிரடி.. மீண்டும் பரபரப்பான இலங்கை..இப்ப என்ன ஆச்சு..?

இந்தியாவில் பொதுவாக குழந்தைகளுக்கு தந்தையின் குடும்ப பெயரே வைக்கப்படும். இதில் கணவர் இறந்துவிட்டால், மறுமணம் செய்துகொள்ளும் தாய் தனது குழந்தைக்கு தன்னுடைய இரண்டாவது கணவருடைய குடும்ப பெயரை சூட்டலாமா? என்ற விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில், நீதிபதிகள் முக்கிய தீர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

குடும்ப பெயர்

இந்த வழக்கில் மனுத்தாக்கல் செய்திருந்த பெண்ணுக்கு திருமணமாகி குழந்தை பிறந்திருக்கிறது. துரதிருஷ்டவசமாக கணவர் இறந்த நிலையில் அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார். அப்போது தனது இரண்டாவது கணவருடைய குடும்ப பெயரை குழந்தைக்கு சூட்ட நினைத்திருக்கிறார். ஆனால், இறந்துபோன முதல் கணவருடைய வீட்டினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே இதுகுறித்து ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், குழந்தையின் உண்மையான தந்தையின் குடும்ப பெயரே சூட்டப்பட்ட வேண்டும் எனவும் அப்படி இல்லையென்றால் அந்த பெண்ணுடைய இரண்டாவது கணவரின் பெயரை வளர்ப்பு தந்தை என்று மட்டுமே ஆவணங்களில் குறிப்பிட வேண்டும் என தீர்ப்பளித்தனர். இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறார் அந்த பெண்.

மேல்முறையீடு

இதனிடையே இந்த வழக்கு விசாரணை நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் கிருஷ்ணா முராரிஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் குழந்தையின் குடும்ப பெயரை தேர்ந்தெடுக்கும் உரிமை தாய்க்கே இருப்பதாக தீர்ப்பளித்தனர். இதுகுறித்து பேசிய நீதிபதிகள்,"தந்தையின் மரணத்திற்குப் பிறகு தாய் இரண்டாவது கணவரின் குடும்பப் பெயரை குழந்தைக்கு வைக்கலாம். ஒரு தாய் மறுமணம் செய்து கொள்ளும் போது குழந்தைக்கு தன் கணவனின் பெயரைக் கொடுப்பதில் அசாதாரணமானது எதுவுமில்லை" என்றனர்.

மேலும் தாயின் இரண்டாவது கணவரின் பெயரை வளர்ப்பு தந்தை என குழந்தை குறிப்பிடுவதால் மனரீதியிலான சிக்கல்கள் ஏற்படலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதுகுறித்து நீதிபதிகள் பேசுகையில்,"ஆவணங்களில் இரண்டாவது கணவரின் பெயரை 'வளர்ப்பு தந்தை' என்று குறிப்பிடுவது கிட்டத்தட்ட கொடூரமானது மற்றும் அடிப்படை சிந்தனையற்றது. இது குழந்தையின் மன ஆரோக்கியத்தையும் சுயமரியாதையையும் பாதிக்கும்" என்றனர்.

Also Read | இந்தியாவுலயே பணக்கார பெண் இவங்கதானாம்.. சொத்து மதிப்பை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.. உலகத்தை திரும்பி பார்க்க வச்ச தமிழ்ப்பெண்..!

MOTHER, CHILD SURNAME, SUPREME COURT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்