அம்மா இறந்து வெறும் 16 நாட்களில்... அடுத்தடுத்து 'மரணமடைந்த' 5 மகன்கள்... மாநிலத்தை உலுக்கிய துயரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅம்மாவை அடக்கம் செய்த 16 நாட்களில் அடுத்தடுத்து 5 மகன்கள் உயிரிழந்து உள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் டன்பெட் மாவட்டம் கட்ரஸ் பகுதியை சேர்ந்தவர் ராணி(88). இவருக்கு 6 மகன்கள் உள்ளனர். இதில் 5 பேர் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் ஒருவர் டெல்லியிலும் வசித்து வந்தனர். இந்த நிலையில் மாத தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற, தன்னுடைய உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராணி மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி இருக்கிறார்.
ஊருக்கு திரும்பிய ஓரிரு நாள்களில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் சோதனை முடிவுகள் வருமுன்னரே கடந்த 4-ம் தேதி அவர் உயிரிழந்தார். தொடர்ந்து அவரது மகன்கள் 5 பேரும் சேர்ந்து அவரை அடக்கம் செய்தனர். அதற்கு அடுத்த நாள் அவரது சோதனை முடிவுகள் வெளியானது.
அதில் ராணிக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியானது. இதனால் அதிர்ந்து போன அதிகாரிகள் அவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா சோதனை செய்ய முடிவு செய்தனர். அதில் உயிரிழந்த ராணியின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 5 மகன்கள் உள்பட குடும்பத்தினர் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அந்த குடும்பத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 (ராணியுடன் சேர்த்து) என உயர்ந்தது.
தொடர்ந்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்தனர். கடைசி மகனும் கடந்த 20-ம் தேதி இறந்தார். டெல்லியில் இருந்ததால் ஒரு மகன் மட்டும் தப்பித்து இருக்கிறார். தற்போது ராணியுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் கண்டுபிடித்து அதிகாரிகள் சோதனை நடத்திட முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் மொத்த ஜார்க்கண்ட் மாநிலத்திலும் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “அப்ப கொரோனாவுல இந்த வியாபாரம்தான் போய்க்கிட்டு இருக்கு!!”.. ‘இரண்டு மடங்கான உற்பத்தி’.. இதுதான் காரணம்!
- “மொத்த குடும்பத்துக்கும் கொரோனா உறுதி ஆயிருக்கு.. அதே சமயம்!”.. தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சொன்னது என்ன?
- அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை - தொழிலாளர் நலன் போற்றும் தமிழக அரசு!
- தமிழகத்தில் 'கோவேக்ஸின்' (COVAXIN) பரிசோதனை வெற்றிகரமாக தொடங்கியது!.. ICMR-இன் அடுத்தடுத்த 'அதிரடி' திட்டங்கள்!.. பரபரப்பு தகவல்!
- உலகிலேயே கொரோனா 'மரணம்' குறைவாக உள்ள நாடு... மத்திய அரசு தகவல்!
- தென் மாவட்டங்களில் அதிவேகமாக பரவும் கொரோனா!.. விருதுநகரில் 360 பேருக்கு தொற்று!.. பிற மாவட்டங்களில் கொரோனா நிலவரம் என்ன?
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!.. ஒரே நாளில் மளமளவென அதிகரித்த குணமடைவோர் எண்ணிக்கை!.. முழு விவரம் உள்ளே
- அப்பாடா! ஒருவழியா 'பெர்மிஷன்' கெடைச்சிருச்சு... 6 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட 'தியேட்டர்களால்' மகிழ்ச்சி!
- கொரோனாவுக்கு எதிரான... இந்தியாவின் 'கோவாக்சின்' தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
- VIDEO: 'இந்த வகை N-95 மாஸ்க் யாரும் யூஸ் பண்ணாதீங்க...' 'இது அணியுறது ஆபத்து...' - மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை...!