'கருத்துச் சுதந்திரமா இது?',அட்வைஸ் பண்ணி ஜாமின் கொடுத்த சுப்ரீம் கோர்ட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மம்தா பானர்ஜியின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து அவதூறான வகையில் இணையத்தில் வெளியிட்ட பாஜக மகளிர் இளைஞரணி தலைவருக்கு ஜாமீன் வழங்குவதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் நியூயார்க்கில் நிகழ்ந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்ட நடிகை பிரியங்கா சோப்ராவின் ஆடையலங்காரமும் ஒப்பனை விதமும் ட்ரெண்டானது. ஆனால், பிரியங்காவின் முகத்துக்கு பதில் மம்தாவின் புகைப்படத்தை வைத்து, மார்ஃபிங் செய்து கேலி செய்யும் வகையில் பாஜகவைச் சேர்ந்த மகளிர் இளைஞரணி தலைவரும் ஹவுராவைச் சேர்ந்தவருமான பிரியங்கா ஷர்மா கடந்த மே 9-ஆம் தேதி வெளியிட்டிருந்ததாக குற்றம் சாட்டி, அவர் மீது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தனர்.

இதனையடுத்து மேற்குவங்கத்தின் முதல்வராகவும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் உள்ள மம்தா பானர்ஜியின் இப்படியான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டதாகக் கூறப்பட்ட பிரியங்கா ஷர்மா, ஐபிசி 500, 66ஏ, 67ஏ உள்ளிட்ட பிரிவுகளில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவரை விடுவிக்கக் கோரி அவரது குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கை, இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கண்ணா உள்ளிட்ட நீதிபதிகள் கொண்ட அமர்வு, அவசர வழக்காக விசாரித்தது.

அதில், பொதுவாழ்க்கையில் இருப்பவர்களின் கருத்துச் சுதந்திரமும், அரசியல் தளத்தில் இருப்பவர்களின் கருத்துச் சுதந்திரமும் ஒன்றல்ல. நாகரிகமற்ற முறையில், மற்றவர்களை தரம் தாழ்த்தி, அவர்களை பாதிக்கும் அளவுக்கு கருத்துக்களை வெளியிட யாருக்கும் உரிமை இல்லை என்று கூறிய நீதிபதிகள், பிரியங்கா ஷர்மா அவருக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட்டனர். முன்னதாக பிரியங்கா ஷர்மா மன்னிப்புக் கோர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

TMC, BJPYOUTHLEADER, PRIYANKASHARMA, MAMATABANERJEE

மற்ற செய்திகள்