‘விவசாயிகளை’ விட ‘இவர்களே’ அதிகம்... ‘தற்கொலை’ குறித்து வெளியாகியுள்ள ‘அதிர்ச்சி’ புள்ளிவிவரம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் 2018ஆம் ஆண்டில் 1.34 லட்சம் பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தேசிய குற்ற ஆவண புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 2018ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து, 34 ஆயிரத்து, 516 பேர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது 2017ஆம் ஆண்டைவிட 3.6 சதவீதம் அதிகம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதில் மராட்டிய மாநிலம் முதலிடத்திலும் (17,972 பேர்), தமிழ்நாடு 2ஆம் இடத்திலும் (13,896 பேர்), மேற்குவங்காளம் 3ஆம் இடத்திலும் (13,225 பேர்), மத்தியபிரதேசம் 4ஆம் இடத்திலும் (11,775 பேர்), கர்நாடகம் 5ஆம் இடத்திலும் (11,561 பேர்) உள்ளது. இந்த 5 மாநிலங்களிலேயே நாட்டின் பாதி தற்கொலைகள் (50.9 சதவீதம்) நடைபெற்றுள்ளது.

2018ஆம் ஆண்டு சராசரியாக தினமும் வேலை இல்லாதவர்கள் 35 பேரும், சுயதொழில் செய்வோர் 36 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அந்த ஆண்டில் வேலை இல்லாதவர்கள் 12,936 பேரும் (9.6 சதவீதம்), சுயதொழில் செய்வோர் 13,149 பேரும் (9.8 சதவீதம்) தற்கொலை செய்துள்ளனர். விவசாய துறையில் 10,349 பேர் (7.7 சதவீதம்) தற்கொலை செய்துள்ளனர். இதில் 5,763 பேர் விவசாயிகள், 4,586 பேர் விவசாய தொழிலாளர்கள்.

2018ஆம் ஆண்டு தற்கொலை செய்த பெண்கள் 42,391, இதில் 22,937 பேர் (54.1 சதவீதம்) குடும்பத் தலைவிகள், 1,707 பேர் அரசு ஊழியர்கள் (1.3 சதவீதம்), 8,246 பேர் தனியார் நிறுவன ஊழியர்கள் (6.1 சதவீதம்), 2,022 பேர் பொதுத்துறை ஊழியர்கள் (1.5 சதவீதம்), 10,159 பேர் மாணவர்கள் (7.6 சதவீதம்). இந்தப் புள்ளி விவரத்தின்படி, 2018ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டவர்களில் விவசாயிகளை விட வேலை இல்லாதவர்களே அதிகம் ஆகும்.

SUICIDEATTEMPT, SUICIDE, INDIA, FARMER, UNEMPLOYED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்