'அமெரிக்கா.. கத்தார்ல இருந்தெல்லாம் கேக்குறாங்க!'..'1500 ஆர்டர்ல ஆரம்பிச்சுது.. இப்போ'.. உலக அளவில் டிரெண்ட் ஆன ‘ஹிந்தி தெரியாது’ டிஷர்ட் தயாரிப்பாளர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிரைப்பிரபலங்கள் மற்றும் பலரால் டிரெண்டான “ஹிந்தி தெரியாது போடா” டி-ஷர்ட்டுக்கு தற்போது அதிக அளவில் ஆர்டர்கள் குவிந்து வருவதாகக் கூறியுள்ளார்.
ஹிந்தி தெரியாது போடா டி-ஷர்ட் இணையத்தில் பிரபலமானது. இந்திய அளவில் டிரெண்டான இந்த டி-ஷர்ட்களை அணிவதற்கு பலரும் ஆர்வம் காட்டிவரும் நிலையில், இந்த டி-ஷர்ட்களை தயாரித்த திருப்பூர் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் தற்போது 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டி-ஷர்ட்களுக்கான ஆர்டர் குவிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
5 ஆண்டுகளாக பின்னலாடை உற்பத்தி நிறுவனம் நடத்தி வந்த இவரிடம் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இந்த டி-ஷர்ட் டிசைன்களை கொடுத்து 1500 ஆர்டர்களை வழங்கியதாகவும், அதன் பின் திரைப்பிரபலங்கள் அந்த டி-ஷர்ட்டை அணிந்ததால் தற்போது ஆர்டர்கள் அதிகமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, கத்தார் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் கூட இந்த டி-ஷர்ட்டுக்கான ஆர்டர்கள் குவிந்துவருவதாகவும், இதனால் அதிக தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பதுடன், உலகம் முழுவதும் இந்த டி-ஷர்ட் டிரெண்டாவதை அறிய முடிவதாகவும் அவர் நியூஸ் 18 சேனலிடம் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இந்தி புக் உடன்... செல்ஃபி எடுத்து அனுப்புங்க... பரிசு காத்திருக்கு... மதுரையில் ஊழியர்களுக்கு புதிய திட்டம்!
- ‘தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை’.. ‘கிண்டலுக்கு தமிழில் பதிலடி கொடுத்த மிதாலி ராஜ்’..
- 'கல்லூரிகளில் இந்தி கட்டாயம்'... 'மீண்டும் சர்ச்சையை கிளப்பிய யுஜிசி சுற்றறிக்கை’!
- 'தமிழ்ல பேசாதீங்க' ... 'தென்னக ரயில்வே' அதிரடி உத்தரவு... வெடிக்கும் புதிய சர்ச்சை!