1979 "மச்சு அணை உடைப்பு" விபத்திலேயே உயிர் பிழைத்த பெண்.. மோர்பி தொங்கு பால விபத்தில் உயிரிழந்த சோகம்.!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

43 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தின் மச்சு ஆற்றின் விபத்தில் தப்பிய பெண் ஒருவருக்கு மோர்பி பால் விபத்தில் நேர்ந்த சம்பவம் கடும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | IPL 2023 : சிஎஸ்கேல ஜடேஜா ஆடுவாரா, மாட்டாரா?.. தோனியின் விருப்பம் இது தான்.. தீயாய் பரவும் தகவல்!!

குஜராத் மாநிலம், மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றில் மீது தொங்கு பாலம் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த தொங்கு பாலம் அறுந்து விழுந்த நிலையில், அதில் இருந்த 130 க்கும் மேற்பட்டோர் ஆற்றில் மூழ்கி பலியாகி இருந்தனர். இன்னும் நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்திருந்த நிலையில், பலர் நீந்தியே கரை சேர்ந்திருந்தனர்.

சுமார் 125 பேர் வரை நிற்க கூடிய பாலத்தில், 400 க்கும் அதிகமானோர் நின்று கொண்டிருந்த காரணத்தினால் தான் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சிலரை போலீசார் கைதும் செய்துள்ளனர். இதனிடையே, மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த பெண் குறித்து தெரிய வந்துள்ள தகவல், கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலம், மோர்பி நகரை சேர்ந்தவர் மும்தாஜ் மக்வானா (வயது 62). கடந்த 1979 ஆம் ஆண்டு, மும்மதாஜுக்கு 19 வயதாக இருந்த சமயத்தில், தொடர் மழை காரணமாக மோர்பியில் மச்சு நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை நள்ளிரவில் உடைந்து போனது. இதன் காரணமாக, மோர்பி மற்றும் அதன் சுற்று கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து கொண்டு ஆயிரக்கணக்கான வீடுகளையும் மூழ்கடித்திருந்தது.

இந்த விபத்தில் சுமார் 2,500 க்கு மேற்பட்டோரும் உயிரிழந்திருந்தனர். உலகின் மிக மோசமான பேரழிவுகளில் ஒன்றாக இந்த மச்சு ஆற்று அணை வெடிப்பு கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றிருந்தது. மேலும் இந்த விபத்தின் போது மச்சு ஆற்றுக்கு சற்று தொலைவில் இருந்த மும்தாஜ் மற்றும் அவரது கணவர் ஆகியோர் உயிர் பிழைத்தனர். அந்த சமயத்தில் கர்ப்பிணியாக இருந்த மும்தாஜ் மற்றும் அவரது கணவர், வீட்டின் கூரையில் ஏறிக் கொண்டதால் மச்சு நதி ஏற்படுத்திய பேரழிவில் இருந்து தப்பித்தனர். அதே போல, சுமார் 4 பேர் வரை உயிர் பிழைக்கவும் மும்தாஜ் காரணமாக இருந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் தனது மருமகள் உள்ளிட்டோருடன் மோர்பி தொங்கு பாலத்திற்கு சென்றிருந்த மும்தாஜ் அங்கே பரிதாபமாக தனது குடும்பத்தினருடன் உயிரிழந்து போனார். 43 ஆண்டுகளுக்கு முன்பு கோரா விபத்தில் இருந்து உயிர் பிழைத்து மற்ற சிலரும் உயிர் பிழைக்க உதவிய பெண் தொங்கு பால விபத்தில் உயிரிழந்த சம்பவம், அவரது கணவர், மகன் உள்ளிட்டோரிடையே கடும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

Also Read | Karnataka : ‘ஆதார் அட்டை இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்ட கர்ப்பிணி.?’.. தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் .. தென்னிந்தியாவை உலுக்கிய துயரம்.!

GUJARAT, MORBI BRIDGE COLLAPSE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்