Video: ஊழியர்களை 'தாக்கி'... கொரோனா நோயாளிகளின் 'ரத்த' மாதிரிகளை... திருடிக்கொண்டு 'ஓடிய' குரங்கு!
முகப்பு > செய்திகள் > இந்தியாஊழியர்களை தாக்கி கொரோனா நோயாளிகளின் ரத்த மாதிரிகளை, குரங்கு தூக்கிக்கொண்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியா முழுவதும் கொரோனா எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால் ஒவ்வொரு மாநிலமும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இருந்து குரங்கு ஒன்று கொரோனா நோயாளிகளின் ரத்த மாதிரிகள், ஆப்ரேஷன் கிளவுஸ்கள் ஆகியவற்றை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் ஓடியிருக்கிறது.
கொரோனா நோயாளிகளின் ரத்த பரிசோதனை மாதிரிகள், ஆபரேஷன் கிளவுஸ்கள் ஆகியவற்றை மருத்துவமனை ஊழியர்களை தாக்கி, குரங்கு தூக்கிக்கொண்டு ஓடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் டாக்டர் எஸ்.கே.கார்க் கூறுகையில், ''குரங்கு திருடிச் சென்றது கொரோனா டெஸ்ட் மாதிரிகள் அல்ல. ஆனால், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பரிசோதனைக்காக ரத்தம் சேகரிப்பது வழக்கமான நடைமுறைதான். குரங்கு திருடிச்சென்றது புதிதாக எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள்.
கொரோனா மாதிரிகள் சேகரிக்கப்பட்டு குளிர்ந்த பாக்சில் வைத்து கொண்டு செல்லப்படும். அது திறந்த வெளியில் வைக்கப்படாது. குரங்கில் இருந்து மனிதர்களுக்கு கொரோனா தொற்று பரவும் என அறிவியல்பூர்வமாக கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த சம்பவத்தால் கொரோனா வைரைஸ் பரவ வாய்ப்பு இருக்குமோ என அருகில் உள்ளவர்கள் அச்சப்படத்தேவையில்லை,'' என தெரிவித்து உள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வெட்டுக்கிளிய மூட்டைல கொண்டு வந்தா பணம் சம்பாதிக்கலாமா?'.. வெட்டுகிளியைப் பிடித்து வியாபாரம் செய்தது எப்படி!?.. அதிகாரிகள் நெகிழ்ச்சி!
- கணவனால் 'கைவிடப்பட்ட' இளம்பெண்களை மிரட்டி... ஆபாச படமெடுத்தவருக்கு... மருத்துவ பரிசோதனையில் 'காத்திருந்த' அதிர்ச்சி!
- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது!.. 4 நாட்களில் 36 பேர் பலி!.. அதிரவைக்கும் தகவல்!.. முழு விவரம் உள்ளே
- 'கொரோனா' வைரஸ் உங்கள் 'மனைவி போன்றது...' 'ஆரம்பத்திலேயே' 'கட்டுப்படுத்தி விட' வேண்டும்... 'உதாரணம்' கூறி 'சர்ச்சையில்' சிக்கிய 'மந்திரி...'
- “கனவுல வந்த அம்மன்!... கொரோனாவ முடிவுக்குக் கொண்டுவர நரபலி கேட்டாள்!”..'கோவிலுக்கு' வந்தவரின் 'தலையை' துண்டாக வெட்டிய 'பூசாரி!'
- 'வெட்டுக்கிளிகளை அழித்துவிட்டால் எல்லாம் சரி ஆகிவிடுமா?... அழிப்பிற்கு பின்னால் காத்திருக்கும் பேராபத்து!'.. கதிகலங்க வைக்கும் பகீர் தகவல்!
- "6 அடி தூரம் சமூக விலகல் சேஃப் இல்லை..." 'குளிர்காலத்தில்' காத்திருக்கும் 'ஆபத்து...' 'எச்சரிக்கும்' புதிய 'ஆய்வுகள்...'
- 'இந்த' 7 மாநிலங்களுக்கு 'வெட்டுக்கிளிகள்' படையெடுக்கலாம்... மத்திய அரசு எச்சரிக்கை!
- 'கொரோனாவால்' அதிகமாக பாதிக்கப்பட்ட 'நாடு...' 'அமெரிக்க இல்லை...' இங்கு 'வேறு விதமாக' 'இறப்பு விகிதம்' இருக்கும்...'எச்சரிக்கும் புள்ளி விவரங்கள்...'
- பாட்டிலில் 'எடுத்து' வரப்பட்ட ஆதாரம்... ஊட்டிக்கு 'படையெடுத்த' வெட்டுக்கிளிகள்?